Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | இருபரிமாண (2D) வடிவங்களின் பிரதிபலிப்புகள்

வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு - இருபரிமாண (2D) வடிவங்களின் பிரதிபலிப்புகள் | 5th Maths : Term 1 Unit 1 : Geometry

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்

இருபரிமாண (2D) வடிவங்களின் பிரதிபலிப்புகள்

❖ பொருளும், கண்ணாடியில் தெரியும் அதன் பிம்பமும், சம அளவுடையது. ❖ பொருளும் பிம்பமும் பிரதிபலிப்பு அச்சிலிருந்து சம தொலைவில் உள்ளது. ❖ பொருளின் திசையானது இடது புறத்திலிருந்து வலது புறமாக இருப்பின் கண்ணாடியில் பிம்பமானது வலதுபுறத்திலிருந்து இடதுபுறமாக மாறும்.

இருபரிமாண (2D) வடிவங்களின் பிரதிபலிப்புகள்


செயல்பாடு

ஒரு வெள்ளைத் தாளில், D என்னும் ஆங்கில எழுத்தை பெரிதாக எழுதவும். அதன் அருகில் பென்சிலைக் கொண்டு ஒரு கோட்டை வரைந்து அதன் மீது கண்ணாடியை வைக்கவும்.

D ன் நிழற்படத்தை கண்ணாடியில் உற்று நோக்கவும்.

D என்ற எழுத்தின் நிழல் 'ஆகும். இந்த நிகழ்வு பிரதிபலிப்பாகும்.


தற்போது கண்ணாடியை வெளியே எடு. பென்சிலால் வரையப்பட்ட கோடானது "பிரதிபலிப்பு அச்சு" என்றழைக்கப்படுகிறது.

இதிலிருந்து நாம் அறிவது

பொருளும், கண்ணாடியில் தெரியும் அதன் பிம்பமும், சம அளவுடையது.

பொருளும் பிம்பமும் பிரதிபலிப்பு அச்சிலிருந்து சம தொலைவில் உள்ளது.

பொருளின் திசையானது இடது புறத்திலிருந்து வலது புறமாக இருப்பின் கண்ணாடியில் பிம்பமானது வலதுபுறத்திலிருந்து இடதுபுறமாக மாறும்.

 

செயல்பாடு

கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவத்தின் கண்ணாடி பிம்பத்தை () குறியிடவும்


 

இவற்றை முயல்க

உனக்கு பிடித்தமான சில வடிவங்களை வரைந்து கண்ணாடியைப் பயன்படுத்தி அவற்றின் பிரதிபலிப்பு படங்களையும் ஒரு அட்டையில் வரைந்து அதை உன்னுடைய ஆசிரியரிடம் காட்டவும்.

 

செயல்பாடு


கண்ணாடியின் முன் நிற்கும் போது உன்னுடைய பிம்பத்தை பார்.

சற்று பின்நோக்கி நகரும் போது உன் பிம்பத்தை கண்ணாடியில் பார்க்கவும். கண்ணாடிக்கு அருகில் சற்று முன்நோக்கி வரவும். நீ என்ன பார்க்கிறாய்?

1. கண்ணாடியில் உனது பிம்பமானது அதே அளவில் தெரிகிறது.

(பெரியது, சிறியது, அதே அளவில்)

2. பின்னால் நகர்ந்தால் உனது பிம்பமும் பின்னோக்கி நகர்கிறது.

(பின்னோக்கி, முன்னோக்கி)

3. உனக்கும் கண்ணாடிக்கும் இடைப்பட்ட தூரமும் கண்ணாடிக்கும் உன்னுடைய பிம்பத்திற்கும் இடைப்பட்ட தூரமும் சமம் (சமம், சமமல்ல)

4. நீ கண்ணாடிக்கு அருகில் வரும்போது உன்னுடைய பிம்பத்தின் நகர்வானது முன்னோக்கி இருக்கும். (முன்னோக்கி, பின்னோக்கி)

5. நீ உனது வலது கையை உயர்த்தினால் கண்ணாடியில் உள்ள பிம்பத்தில் இடது கையானது உயருகிறது. (வலது, இடது)

6. நீ உனது இடது கையை உயர்த்தினால் கண்ணாடியில் உள்ள பிம்பத்தில் வலது கையானது உயருகிறது. (வலது, இடது)

 

மகிழ்ச்சி நேரம்

செவ்வக வடிவத் தாளை எடுத்து அதை இரண்டு சமமான பகுதிகளாக மடிக்கவும். மை நிரப்பிய குப்பியில் ஒரு நூலை நனைத்து, மடிக்கப்பட்ட தாளின் உள்ளே வைத்து இழுக்கவும் தற்போது மடிக்கப்பட்ட தாளை திறந்து பார். நீ என்ன பார்க்கிறாய்? மடிக்கப்பட்ட தாளில் இருபுறமும் உள்ள வடிவங்கள் ஒரே மாதிரியானவையா? உனது கருத்துக்களை உனது ஆசிரியரிடம் விவரிக்கவும்.

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்