Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | முப்பரிமாண உருவங்களின் பண்புகள்

வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு - முப்பரிமாண உருவங்களின் பண்புகள் | 5th Maths : Term 1 Unit 1 : Geometry

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்

முப்பரிமாண உருவங்களின் பண்புகள்

பண்புகள்: கனசதுரம், கனசெவ்வகம், உருளை, கோளம், கூம்பு

முப்பரிமாண உருவங்களின் பண்புகள்.

 

கனசதுரம்

பண்புகள்:

இது ஒரு முப்பரிமாண உருவம் (3D) ஆகும்.

இது ஆறு முகங்களை கொண்டது.

இதன் அனைத்து பக்கங்களும் சமம்

இது 8 முனைகளையும் 12 விளிம்புகளையும் கொண்டது.


எடுத்துக்காட்டுகள்


 

கனசெவ்வகம்

பண்புகள்

இது ஒரு முப்பரிமாண உருவம் (3D) ஆகும்.

இது ஆறு முகங்களைக் கொண்டது

இதன் எதிரெதிர் பக்கங்கள் சமம்.

இது 8 முனைகளையும் 12 விளிம்புகளையும் கொண்டது.


எடுத்துக்காட்டுகள்


 

உருளை

பண்புகள்

இது ஒரு முப்பரிமாண உருவம் (3D) ஆகும்.

இரண்டு சமதளங்களையும் ஒரு வளைதளத்தையும் கொண்டது.

இரண்டு சமதளங்களுக்கு இடையே உள்ள தொலைவு உயரம் ஆகும்.


எடுத்துக்காட்டுகள்



கோளம்

பண்புகள்

இது ஒரு முப்பரிமாண உருவம் (3D) ஆகும்.

இதற்கு ஒரேயொரு வளைதளம் மட்டுமே உண்டு.

வளைதளத்தில் உள்ள அனைத்து புள்ளிகளும் மையப்புள்ளியிலிருந்து சம தொலைவில் இருக்கும்.

இதற்கு முனைகளும் விளிம்புகளும் இல்லை.


எடுத்துக்காட்டுகள்


 

கூம்பு

பண்புகள்

இது ஒரு முப்பரிமாண உருவம் (3D) ஆகும்.

இது ஒரு சமதளமும் ஒரு வளைதளமும் கொண்டது.

இது ஒரு முனையைக் கொண்டது.

கூம்பின் முனையிலிருந்து அடிப்பாகத்தின் நடுப்புள்ளி வரை உள்ள தொலைவு உயரம் ஆகும்.


எடுத்துக்காட்டுகள்


 

செயல்பாடு

நம்மை சுற்றியுள்ள முப்பரிமாண (3D) பொருள்களை உற்றுநோக்கி அட்டவணையை நிரப்புக


பின்வரும் முப்பரிமாண உருவங்களை உற்றுநோக்கி மனிதரின் பார்வையில்  தெரியும் வடிவத்தை () குறியிடவும்.



5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்