மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை | பொருளியல் | சமூக அறிவியல் - விரிவான விடையளி | 9th Social Science : Economics : Understanding Development: Perspectives, Measurement and Sustainability

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை

விரிவான விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : விரிவான விடையளி

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.


1. நிலையான மேம்பாட்டிற்கான கொள்கைகளைப் பற்றி விவரி.

விடை:

தற்போதுள்ள சுற்றுச்சூழலை சேதப்படுத்தாமல், எதிர்கால சந்ததியினரின் தேவைகளுக்காக எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் மேம்பாடு அடைதலே நிலையான பொருளாதார மேம்பாடு ஆகும். நிலையான மேம்பாட்டை அடைய பொருளாதார, சமூக, சுற்றுச்சூழல் தன்மையை சமநிலையில் வைத்திருக்க வேண்டும்.

இந்தியாவின் மின்தேவைக்கான அனல் மற்றும் புனல் மின் உற்பத்தி நிலையங்களும் பாதகமான சுற்றுச் சூழல் தாக்கத்தைக் கொண்டுள்ளன. எனவே மரபு சாரா வளங்களைப் பயன்படுத்துதல் நிலையான மேம்பாட்டிற்கு மிகவும் அத்தியாவசியம்.

சூரிய ஒளி மூலம் மின் சக்தியை நேரடியாக சூரிய ஒளியின் மின்னழுத்த செயல்கள் மூலம் உற்பத்தி செய்து பயன்படுத்துவது சூரிய சக்தி ஆகும். தமிழ் நாடு அதிக அளவில் சூரிய மின்தகடு அமைப்பு கொண்ட மாநிலம் ஆகும்.

 

2. இந்தியாவின் சுற்றுச்சூழல் கொள்கைகளைப் பற்றி விளக்கமாக விவரிக்கவும்.

விடை:

காற்று, நீர் மாசுபாடு, கழிவு மேலாண்மை, பல்லுயிர் பாதுகாப்பு போன்ற சிக்கல்களைப் பாதுகாக்கும் விதமாக கடந்த 30 ஆண்டுகளாக இந்தியா தன் சுற்றுச் சூழல் கொள்கைகளை உருவாக்கிக் கொண்டு உள்ளது.

நிலையற்ற காலநிலை, குறைந்த வளங்கள் போன்றவற்றை எதிர்கொண்டு, அணுகு முறைகளில் மாற்றம் கண்டு இந்தியா தனது பாதையில் சவால்களைச் சந்தித்து நிலையான மேம்பாட்டை அடைந்துள்ளது.

இந்தியாவின் உச்சநீதி மன்றம் தனது தீர்ப்புகள், நீதிமன்ற வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் அதிகாரங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி, நடைமுறைப் படுத்த உத்தரவிட்டுள்ளது.

மக்களுக்கு அதிக வருமானம், திறன் மிக்க கல்வி, சிறந்த சுகாதாரம், ஊட்டச்சத்து உணவு, வறுமையற்ற நிலை சமவாய்ப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வாழ்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துவதற்கான சட்டங்களை உருவாக்குவதே இந்தியாவின் சுற்றுச்சூழல் கொள்கைகள் ஆகும்.

 

3. புதுப்பிக்க தக்க வளங்கள் மற்றும் புதுப்பிக்க தகாத வளங்கள்  வேறுபடுத்துக.

விடை:

புதுப்பிக்க தக்க வளங்கள்:

1 மீண்டும் மீண்டும் எளிதாக உற்பத்தி செய்யக்கூடிய வளங்கள் புதுப்பிக்கக்  கூடிய வளங்களாகும்.

2 புதுப்பிக்கத் தக்க வளங்கள் மாசற்ற மற்றும்  சுற்றுச்சூழல் நலம் காக்கிறது.

3 இந்த வளங்கள் புதுப்பிப்பதற்கான ஒரு குறுகிய நேரத்தை எடுத்துக் கொள்கிறது

4 எடுத்துக்காட்டு. சூரியசக்தி, காற்று சக்தி, நீர், மரம், காகிதம்

புதுப்பிக்க தகாத வளங்கள்:

1. பயன்பாட்டிற்குப் பிறகு மீண்டும் கிடைக்க இயலாத

வளங்கள் புதுப்பிக்க இயலாத வளங்கள் ஆகும்.

2. புதுப்பிக்கத் தகாத வளங்கள் சூழலை மாசுப்படுத்தவும் மற்றும் சேதப்படுத்தவும் செய்கின்றன.

3. இந்த வளங்கள் உருவாக்குவதற்குப் பல. நூற்றாண்டுகள் தேவைப்படுகின்றன.

4 எடுத்துக்காட்டு. உலோகங்கள், கண்ணாடி, புதைப்படிவ எரிபொருட்கள் (நிலக்கரி, பெட்ரோல், இயற்கை எரிவாயு டீசல்)

 

4. ஏதேனும் ஐந்து சுற்றுச்சூழுல் சட்டங்களையும் அவற்றின் செயல்களையும் விவரி.

விடை:

1. சட்டம் : தேசியப் பசுமை தீர்ப்பாய சட்டம், 2010

செயல்பாடு : சுற்றுச்சூழல் பாதுகாப்பு காடுகள் மற்றும் இயற்கை

வளங்களைப் பாதுகாக்கிறது

2. சட்டம் : பல்லுயிர்மை பாதுகாப்புச் சட்டம், 2002

செயல்பாடு: பல்லுயிர்மைகளைப் பாதுகாத்தல்.

3. சட்டம் : சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1986

செயல்பாடு: சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும்  மேம்படுத்தலுக்கான அதிகாரம் வழங்குதல்.

4. சட்டம் : வன பாதுகாப்பு சட்டம், 1980

செயல்பாடு: காடுகளை அழித்தலை தடைசெய்தல் மற்றும் காடுகள் அல்லாத பகுதிகளில் மரம் வளர்த்தலை ஊக்கப்படுத்துதல்.

5. சட்டம் : நீர் (நீர் பாதுகாப்பு மற்றும் மாசுபடுத்துதல் தடுப்பு) சட்டம், 1974

செயல்பாடு: அனைத்து வகையான ஆறுகள், ஏரிகள், குளங்களை மீட்டு பராமரித்தல்.

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை