பொருளியல் - நிலையான மேம்பாடு | 9th Social Science : Economics : Understanding Development: Perspectives, Measurement and Sustainability

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை

நிலையான மேம்பாடு

நிலையான பொருளதார மேம்பாடு என்பது, தற்போதுள்ள சுற்றுசூழலைச் சேதப்படுத்தாமல் மேம்பாடு அடைய வேண்டும். எதிர்கால சந்ததியினரின் தேவைகளுக்காக எவ்வித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது.

நிலையான மேம்பாடு

நிலையான பொருளதார மேம்பாடு என்பது, தற்போதுள்ள சுற்றுசூழலைச் சேதப்படுத்தாமல் மேம்பாடு அடைய வேண்டும். எதிர்கால சந்ததியினரின் தேவைகளுக்காக எவ்வித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது.

சுற்றுச்சூழல் சீரழிவின் விளைவுகள் தேசிய மாநில எல்லைகளுக்கு உட்பட்டது மட்டும் அல்ல. அறிவியல் அறிஞர்கள் பொருளதார வல்லுநர்கள், தத்துவவாதிகள் மற்றும் பிற சமூகவியலாளர்கள் போன்றோர் ஒன்று சேர்ந்து உழைப்பதன்விளைவாக நிலையான மேம்பாடு அமையும்.

இயற்கை வளங்களை புதுப்பிக்கத் தக்க மற்றும் புதுப்பிக்கதகாத வளங்கள் என இருவகையாகப் பிரிக்கலாம்.

1. புதுப்பிக்கத் தக்க வளங்களை புதுப்பிக்க இயலும். .கா சூரிய சக்தி

 2. புதுப்பிக்க இயலாத வளங்களை புதுப்பிக்க இயலாது .கா நிலக்கரி, பெட்ரோல்

நிலத்தடி நீர் என்பது புதுப்பிக்கத் தகுந்த வளங்களின் ஒரு எடுத்துக்காட்டாகும். வளங்களை மீண்டும் பயன்படுத்துவதற்குக் பதிவாகச் செலவு செய்து விட்டால் எவ்வாறு நிலையான மேம்பாடு சாத்தியமாகும் என்ற கேள்வி எழுகிறது. புதுப்பிக்கத் தகாதவளங்கள்பல ஆண்டுகளுக்குப்பயன்படுத்தியப் பிறகு தீர்ந்து விடும். மேலும் அவற்றைப் உருவாக்க இயலாது.

நிலையான மேம்பாட்டை அடைவதற்கு பொருளதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல்தன்மையை சம நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பொதுவாக மேம்பாடு அல்லது முன்னேற்றம் பற்றிய கேள்வி தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது. சமூக உறுப்பினராகவும் தனிப்பட்ட நபராகவும் நாம் செல்ல வேண்டிய பாதை, நம் பங்கு மற்றும் இலக்குகள் பற்றி தெளிவான கருத்துக்களுடன் இருக்க வேண்டும்.

உங்களுக்குத் தெரியுமா?

தமிழ்நாட்டின் கல்வியறிவு  வீதம் தென்மாநிலங்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் கல்வியறிவு வீதம் தேசியச் சராசரியை விட அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் உயர்கல்விக்கானச் சேர்க்கையானது இந்தியாவில் மிக உயர்ந்ததாகும்.




புதுபிக்கத் தக்க வளங்கள்

புதுபிக்கத் தக்க வளங்கள் மாசற்ற மற்றும் சுற்றுசூழல் நலம் காக்கிறது.

இந்த வளங்கள் புதுப்பிற்பதற்கான ஒரு குறுகிய நேரத்தை எடுத்துக் கொள்கிறது.

எடுத்துக்காட்டு சூரியசக்தி, காற்று சக்தி, நீர், மரம், காகிதம்

புதுபிக்க இயலாத வளங்கள்

புதுபிக்க தாகத வளங்கள் சூழலை மாசுப்படுத்தவும் சேதப்படுத்தவும் செய்கின்றன. இந்த வளங்கள் உருவாதற்குப் பலநூற்றாண்டுகள் தேவைப்படுகின்றன.

எடுத்துக்காட்டு உலோகங்கள், கண்ணாடி, புதைப்படிவ எரிபொருட்கள் (நிலக்கரி, பெட்ரோல், இயற்கை எரிபொருட்கள் (நிலக்கரி, பெட்ரோல், இயற்கை எரிவாய், டீசல் )


9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை