மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை | பொருளியல் | சமூக அறிவியல் - செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் , வாழ்வியல் திறன் | 9th Social Science : Economics : Understanding Development: Perspectives, Measurement and Sustainability
VI. செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் (மாணவர்கள்
செய்ய
வேண்டியது)
1.
உலகெங்கும் காணப்படும் குப்பை மற்றும் கழிவுகளின் பிரச்சனைகளை கண்டறிந்து பல்வேறு வழிமுறைகளை பட்டியலிடுக.
VII. சிந்தனை வினா
1.
உனது
பகுதியில்
நீங்கள்
எதிர்கொள்ளும்
சுற்றுச்சூழல்
பிரச்சனைகள்
பற்றி
விவரி.
விடை:
• குப்பைகளை சேமித்து வைக்கும் தொட்டிகளை நாள்தோறும் சுத்தம் செய்யவில்லை என்றால் நோய் பரவுகிறது.
• வீட்டிற்கு அருகில் உள்ள நீரோடைகளில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் நீரை பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
• அதிகப்படியான தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகையினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
• சாக்கடை மற்றும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுற்றுச்சூழல் மாசு அடைகிறது.
VIII. வாழ்வியல் திறன்.
1.
தனிநபர்
வருமானத்தை
எவ்வாறு
கணக்கிடுவாய்?
விடை:
நாட்டின் மொத்த வருமானத்தை நாட்டின் மொத்த மக்கள் தொகையால் வகுக்க வேண்டும். இதுவே தலா வருமானம் எனப்படும். இது ஒரு நாட்டின் தனிமனிதனின் சராசரி வருமானம் ஆகும்.
தலா வருமானம் = நிகர நாட்டு உற்பத்தி / நாட்டின் மொத்த மக்கள் தொகை