Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | இருசொற் பெயரிடுதல்

தாவர உலகம் | அலகு 17 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - இருசொற் பெயரிடுதல் | 8th Science : Chapter 17 : Plant Kingdom

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 17 : தாவர உலகம்

இருசொற் பெயரிடுதல்

ஓர் உயிரினத்திற்கு இரண்டு சொற்களால் பெயரிடும் முறை இருசொற் பெயரிடுதல் எனப்படும். உதாரணமாக, மாஞ்சிஃபெரா இன்டிகா என்பது மாமரத்தின் தாவரவியல் பெயராகும். மாஞ்சிஃபெரா என்னும் சொல் பேரினத்தையும், இண்டிகா என்ற சொல் சிற்றினத்தையும் குறிக்கிறது.

இருசொற் பெயரிடுதல் முறையை காஸ்பர்டு பாகின் என்பவர் 1623 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். இம்முறையை லின்னேயஸ் தனது ஸ்பீசிஸ் பிளான்டாரம் புத்தகத்தில் நடைமுறைப்படுத்தினார். அறிவியல் முறையில் தாவரங்களுக்குப் பெயர் சூட்டும் முறையை தாவரவியல் பெயரிடுதல் என்கிறோம்.

இந்தியாவிலுள்ள மிகப் பெரிய உள்ளளுக்கும் உலர் தாவரத் தொகுப்பு (Herbarium) கொல்கத்தாவில் உள்ளது. இங்கு பத்து இலட்சத்திற்கும் அதிகமான உலர் தாவர மாதிரிகள் (Herbarium) உள்ளன.

தகவல் துளிகள்

இருசொற்பெயரிடுமுறை தொடர்பான விதிமுறைகள் மற்றும் பரிந்துரைகள் ICBN (அகில உலக தாவரவியல் பெயர் சூட்டும் சட்டம்) அமைப்பில் உள்ளது, தற்போது இது ICN (அகில உலக பெயர் சூட்டும் சட்டம்) என அழைக்கப்படுகிறது.

செயல்பாடு 4

உனது பள்ளி வளாகத்தினுள் வளரும் தாவரங்களைச் சேகரிக்கவும். அவற்றின் வட்டாரப் பெயர், தாவரவியல் பெயர் மற்றும் அது ஒரு வித்திலைத் தாவரமா அல்லது இரு வித்திலைத் தாவரமா என்பதை அட்டவணைப்படுத்துக.

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 17 : தாவர உலகம்