Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | மருத்துவத் தாவரங்களின் பயன்கள்

தாவர உலகம் | அலகு 17 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - மருத்துவத் தாவரங்களின் பயன்கள் | 8th Science : Chapter 17 : Plant Kingdom

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 17 : தாவர உலகம்

மருத்துவத் தாவரங்களின் பயன்கள்

தாவரங்கள் நமக்கு பல்வேறு வகைகளில் பயன்படுகின்றன. சில தவரங்கள் அவற்றின் பாகங்களுடன் நமக்கு மருந்தாகப்பயன்படுகின்றன. சில தாவரங்களின் மருத்துவப் பயன்கள் கீழே தரப்பட்டுள்ளன.

மருத்துவத் தாவரங்களின் பயன்கள்

தாவரங்கள் நமக்கு பல்வேறு வகைகளில் பயன்படுகின்றன. சில தவரங்கள் அவற்றின் பாகங்களுடன் நமக்கு மருந்தாகப்பயன்படுகின்றன. சில தாவரங்களின் மருத்துவப் பயன்கள் கீழே தரப்பட்டுள்ளன.


அகாலிஃபா இன்டிகா (குப்பைமேனி)

• இது யூஃபோர்பியேசி குடுமபத்தைச் சேர்ந்தது.

• இதன் இலையை அரைத்துப் பெறப்படும் பசை, தோலில் உள்ள தீக்காயத்திற்கு மருந்தாகும்.

• இந்த இலையின் சாற்றை எலுமிச்சை சாற்றுடன் கலந்து அருந்தினால் வயிற்றிலுள்ள உருளைப் புழுக்கள் அழியும்.



ஏகில் மார்மிலோஸ் (வில்வம்).

• இது ரூட்டேசி கடும்பத்தைச் சேர்ந்தது.

• இதன் காயானது செரிமானக் குறைபாடுகளைச் சரி செய்கிறது.

• இது தீராத வயிற்றுப்போக்கு, சீதபேதி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.



சொலானம் டிரைலொபேட்டம் (தூதுவளை)

• இது சொலனேசி குடும்பத்தைச் சேர்ந்தது.

• .இதன் இலைகளும் கனிகளும் இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகப் பயன்படுகின்றன.

• இது காசநோய் மற்றும் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.



ஃபில்லாந்தஸ் அமாரஸ் (கீழா நெல்லி)

• கீழா நெல்லி யூஃபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்தது.

• இதன் தாவர உடலம் முழுவதும் மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.

• இது கல்லீரலுக்கு வலிமையைக் கொடுத்து, கல்லீரல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.



அலோ வெரா (சோற்றுக் கற்றாழை)

• சோற்றுக் கற்றாழை லில்லியேசி குடும்பத்தைச் சேர்ந்தது.

• இதன் இலைகள் மூலநோய் மற்றும் தோல் பகுதியில் தோன்றும் அழற்சியைக் குணப்படுத்துகின்றன.

• இது வயிற்றுப் புண்ணுக்குரிய மருந்தாகும்.


8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 17 : தாவர உலகம்