Home | 10 ஆம் வகுப்பு | 10வது கணிதம் | மூன்று கணங்களின் கார்டீசியன் பெருக்கல்

வடிவியல் விளக்கம் - மூன்று கணங்களின் கார்டீசியன் பெருக்கல் | 10th Mathematics : UNIT 1 : Relation and Function

10வது கணக்கு : அலகு 1 : உறவுகளும் சார்புகளும்

மூன்று கணங்களின் கார்டீசியன் பெருக்கல்

A, B, C ஆகியவை வெற்றில்லா கணங்கள் எனில், அதன் கார்டீசியன் பெருக்கற்பலனின் கணமானது அனைத்து சாத்தியமான வரிசையில் அமைந்த மூன்றின் தொகுதிகளின் கணமாகும். A × B × C = {(a, b, c) அனைத்து a ∈ A, b ∈ B, c ∈ C}

மூன்று கணங்களின் கார்டீசியன் பெருக்கல் (Cartesian Product of three Sets)

A, B, C ஆகியவை வெற்றில்லா கணங்கள் எனில், அதன் கார்டீசியன் பெருக்கற்பலனின் கணமானது அனைத்து சாத்தியமான வரிசையில் அமைந்த மூன்றின் தொகுதிகளின் கணமாகும்.

A × B × C = {(a, b, c) அனைத்து  A,  B, c  C}


இரண்டு மற்றும் மூன்று கணங்களுக்கான கார்டீசியன் பெருக்கலின் வடிவியல் விளக்கம் 

= {0, 1}, = {0, 1}, = {0, 1} என்க

A × B = {0, 1} × {0, 1} = {(0, 0), (0,1), (1, 0), (1,1)}


A × B ஆனது XY- தளத்தில் (plane) குறிக்கப்பட்டுள்ளதைப் படம் 1.5-ல் காணலாம்.

(A × B) × C = {(0, 0), (0,1), (1, 0), (1,1)} × {0,1}

= {(0, 0, 0), (0, 0,1), (0,1, 0), (0,1,1), (1, 0, 0), (1, 0,1) (1,1, 0), (1,1,1)}

A × B × C ஆனது XYZ - என்ற வெளியில் (space) குறிக்கப்பட்டுள்ளதைப் படம் 1.6 ல் காணலாம்.


A × B என்பது இரு பரிமாணத்தில் சதுரத்தின் புள்ளிகளைக் குறிக்கிறது. A × B × C என்பது முப்பரிமாணத்தில் கனசதுரத்தின் புள்ளிகளைக் குறிக்கிறது.


குறிப்பு 

பொதுவாக, இரண்டு வெற்றில்லா கணங்களின் கார்டீசியன் பெருக்கல் இரு பரிமாணங்களைக் கொண்ட வடிவத்தை ஏற்படுத்தும். அதேபோல் மூன்று வெற்றில்லா கணங்களின் கார்டீசியன் பெருக்கல் மூன்று பரிமாணங்களைக் கொண்ட முப்பரிமாணப் பொருளை ஏற்படுத்தும்.


10வது கணக்கு : அலகு 1 : உறவுகளும் சார்புகளும்