Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | சரியான விடையை தெரிவு செய்க

இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் | விலங்கியல் - சரியான விடையை தெரிவு செய்க | 11th Zoology : Chapter 9 : Locomotion and Movement

11 வது விலங்கியல் : பாடம் 9 : இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம்

சரியான விடையை தெரிவு செய்க

11 வது விலங்கியல் : பாடம் 9 : இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் : சரியான விடையை தெரிவு செய்க, புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்

மதிப்பீடு:


I. சரியான விடையைத் தேர்ந்தெடு.


1. தசைகளை உருவாக்கும் அடுக்கு.

அ) புறப்படை

ஆ) நடுப்படை

இ) அகப்படை

ஈ) நரம்பு புறப்படை

விடை: ஆ) நடுப்படை


2. தசைகள் இவற்றால் ஆனவை

அ) தசைச்செல்கள்

அ) லியூக்கோசைட்டுகள் 

இ) ஆஸ்டியோசைட்டுகள் 

ஈ) லிம்போசைட்டுகள்

விடை: அ) தசைச்செல்கள்


3. எலும்புகளோடு இணைந்துள்ள தசைகள் இவ்வாறு அழைக்கப்படுகிறன.

அ) எலும்புத்தசைகள்

ஆ) இதயத்தசை

இ) இயங்குதசை

ஈ) மென்தசைகள்

விடை: அ) எலும்புத்தசைகள்


4. எலும்புத்தசைகளை எலும்புகளோடு இணைப்பது

அ) தசைநாண்கள்

ஆ) தசைநார்

இ) பெக்டின்

ஈ) ஃபைப்ரின்

விடை: அ) தசைநாண்கள்



5. தசை இழைக் கற்றை இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

அ) மையோஃபைப்ரில்கள்

ஆ) ஃபாசிக்கிள்

இ சார்கோமியர்

ஈ) சார்கோப்பிளாசம்

விடை: ஆ) ஃபாசிக்கிள்



6. தசைநாரிலுள்ள ஆக்ஸிஜனைச் சேமிக்கும் நிறமி

அ) மையோகுளோபின்

ஆ) ட்ரோபோனின்

இ) மையோசின்

ஈ) ஆக்டின்

விடை: அ) மையோகுளோபின்


7. தசைநார்களின் செயல் அலகு

அ) சார்கோமியர்

ஆ) சார்கோபிளாசம்

இ) மையோசின்

ஈ) ஆக்டின்

விடை: அ) சார்கோமியர்


8. தடித்த இழைகளிலுள்ள புரதம்

அ) மையோசின் 

ஆ) ஆக்டின் 

இ) பெக்டின்

ஈ) லியூசின்

விடை: அ) மையோசின் 


9. மெல்லிய இழைகளிலுள்ள புரதம் 

அ) மையோசின் 

ஆ) ஆக்டின்

இ) பெக்டின்

ஈ) லியூசின்

விடை: ஆ) ஆக்டின்


10. அடுத்தடுத்த இரண்டு 'Z’ கோடுகளுக்கிடையே உள்ள பகுதி

அ) சார்கோமியர் 

ஆ) நுண்குழல்கள்

இ) மையோகுளோபின் 

ஈ) ஆக்டின்

விடை: அ) சார்கோமியர் 


11. ஒவ்வொரு எலும்புத்தசையும் இதனால் மூடப்பட்டுள்ளது.

அ) எப்பிமைசியம்

ஆ) பெரிமைசியம்

இ) எண்டோமைசியம்

ஈ) ஹைப்போமைசியம்

விடை: அ) எப்பிமைசியம்


12. இது முழங்கால் மூட்டுக்கு உதாரணம்

அ) சேணமூட்டு

ஆ) கீல்மூட்டு

இ) முளை அச்சு மூட்டு

ஈ) நழுவு மூட்டு

விடை: ஆ) கீல்மூட்டு


13. முதல் முள்ளெலும்பு மற்றும் அச்சு முள்ளெலும்புகளுக்கு இடையே உள்ள மூட்டின் பெயரைக் கூறு.

அ) உயவு மூட்டு

ஆ) முளை அச்சு மூட்டு

இ) சேணமுட்டு

ஈ) கீல்மூட்டு

விடை: ஆ) முளை அச்சு மூட்டு


14. தசைச்சுருக்கத்திற்கான ATPயேஸ் நொதி உள்ள இடம்

அ) ஆக்டினின்

ஆ) ட்ரோப்போனின்

இ) மையோசின்

ஈ) ஆக்டின்

விடை: இ) மையோசின்


15. சைனோவியல் திரவம் காணப்படும் இடம்

அ) மூளையின் வென்ட்ரிக்கிள்கள்

ஆ) தண்டுவடம்

இ) அசையா மூட்டுகள்

ஈ) நன்கு அசையும் மூட்டுகள்

விடை: ஈ) நன்கு அசையும் மூட்டுகள்


16. யூரிக் அமிலப் படிகங்கள் சேர்வதால் மூட்டுகளில் வீக்கம் தோன்றுவது

அ) கௌட்

ஆ) மயஸ்தீனியா கிரேவிஸ்

இ) எலும்புப்புரை

ஈ) ஆஸ்டியோமலேசியா

விடை: அ) கௌட்


17. அசிட்டாபுலம் இதில் அமைந்துள்ளது.

அ) காரை எலும்பு

ஆ) இடுப்பெலும்பு

இ) தோள்பட்டை எலும்பு

ஈ) தொடை எலும்பு

விடை: ஆ) இடுப்பெலும்பு


18. இணையுறுப்புச்சட்டகம் என்பது

அ) வளையங்களும் அதைச்சார்ந்த இணையுறுப்புகளும்

அ) முள்ளெலும்புகள்

இ) கபாலம் மற்றும் முள்ளெலும்புத்தொடர் 

ஈ) விலா எலும்புகள் மற்றும் மார்பெலும்பு

விடை: அ) வளையங்களும் அதைச்சார்ந்த இணையுறுப்புகளும்


19. மாக்ரோஃபேஜ்கள் வெளிப்படுத்தும் இயக்கம்

அ) நீளிழை

அ) குறுயிழை

இ) தசையியக்கம்

ஈ) அமீபா போன்ற இயக்கம் 

விடை: ஈ) அமீபா போன்ற இயக்கம் 


20. முழங்கையின் கூர்மை பகுதி

அ) ஏகுரோமியன் நீட்சி

ஆ) கிளிநாய்டு குழி

இ) ஒலிகிராணன் நீட்சி

ஈ) இணைவு

விடை: இ) ஒலிகிராணன் நீட்சி

11 வது விலங்கியல் : பாடம் 9 : இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம்