Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | எலும்புத் தசையின் பண்புகள் (Properties of Skeletal Muscles)

11 வது விலங்கியல் : பாடம் 9 : இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம்

எலும்புத் தசையின் பண்புகள் (Properties of Skeletal Muscles)

எலும்புத் தசையின் 4 முக்கியப் பண்புகளாவன,

எலும்புத் தசையின் பண்புகள் (Properties of Skeletal Muscles) 

எலும்புத் தசையின் 4 முக்கியப் பண்புகளாவன


கிளர்ச்சித்திறன் (Excitability)

மின்தூண்டல் மற்றும் வேதித்தூண்டல்களுக்கு ஏற்ப வினைபுரிந்து சுருங்கும் திறனுக்குக் கிளர்ச்சித் திறன் எனப்படும்.


சுருங்கும் திறன் (Contractility)

தசைகள் இணைக்கப்பட்டுள்ள உறுப்புகளை நகர்த்தும் தன்மை சுருங்கும் திறன் ஆகும்.


கடத்தும்திறன் (Conductivity)

தசைநாரின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தூண்டலானது மற்ற தசைப்பகுதிகளுக்கும் கடத்தப்படுவது கடத்தும் திறன் ஆகும்.


மீட்சித்திறன் (Elasticity)

தசையானது நீட்சியடைந்தபின் மீண்டும் அதன் உண்மையான இயல்பு நிலையை அடையும் தன்மை மீட்சித்திறன் எனப்படும்.


தெரிந்து தெளிவோம்

எல்லா தசைகளும் இயக்கத்தை ஏற்படுத்தினாலும் எலும்புத்தசை மட்டுமே இடப்பெயர்ச்சிக்கு காரணமாகும். இதன் பொருள் என்ன?

11 வது விலங்கியல் : பாடம் 9 : இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம்