Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | மின்னழுத்தமானியை பயன்படுத்தி இரு மின்கலங்களின் மின்னியக்கு விசைகளை ஒப்பிடுதல்

விளக்கம், சூத்திரங்கள், தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள் | கிர்க்காஃப் விதி மற்றும் வீட்ஸ்டோன் சமனச் சுற்று - மின்னழுத்தமானியை பயன்படுத்தி இரு மின்கலங்களின் மின்னியக்கு விசைகளை ஒப்பிடுதல் | 12th Physics : UNIT 2 : Current Electricity

12 வது இயற்பியல் : அலகு 2 : மின்னோட்டவியல்

மின்னழுத்தமானியை பயன்படுத்தி இரு மின்கலங்களின் மின்னியக்கு விசைகளை ஒப்பிடுதல்

மின்னழுத்தமானியை பயன்படுத்தி இரு மின்கலங்களின் மின்னியக்கு விசைகளை ஒப்பிடுதல்

மின்னழுத்தமானியை பயன்படுத்தி இரு மின்கலங்களின் மின்னியக்கு விசைகளை ஒப்பிடுதல்

இருமின்கலங்களின் மின்னியக்கு விசைகளை ஒப்பிட, படம் 2.28 ல் உள்ளவாறு மின்சுற்று இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. மின்னழுத்தமானி கம்பி CD ஆனது மின்கலத்தொகுப்பு Bt மற்றும் சாவி K உடன் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இது முதன்மைச் சுற்று ஆகும். கம்பியின் C முனைDPDT சாவியில் உள்ள (Double Pole Double Throw) M முனையில் இணைக்கப்பட்டுள்ளது. N முனையானது கால்வானா மீட்டர் (G), உயர் மின்தடையாக்கி (HR) வழியாக தொடு சாவியுடன் இணைக்கப்பட்டுள்ளது. மின்னியக்கு விசைகள் ஒப்பிட வேண்டிய இரு மின்கலங்கள், ε1மற்றும்ε2 முறையே DPDT இல் உள்ள M1, N1 மற்றும் M2, N2 முனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. மின்கலத்தொகுப்பின் (Bt) நேர் மின்முனை மற்றும்ε1, ε2 ஆகிய மின்கலங்களின் நேர் மின்முனைகள் ஆகியவை மின்னழுத்தமானி கம்பியில் உள்ள C முனையிலேயே இணைக்கப்பட வேண்டும்.


DPDT சாவியை M1, N1முனைகளில் அழுத்தும் போது ε1 மின்கலம் துணைச்சுற்றில் இணைக்கப்படுகிறது. இப்போது தொடு சாவியை நகர்த்தி கால்வனாமீட்டரில் சுழி விலக்கம் பெறப்பட்டு சமன்செய் நீளம் l1 அளவிடப்படுகிறது. பின்னர் இரண்டாவது மின்கலம்ε2 மின்சுற்றில் இணைக்கப்பட்டு சமன்செய் நீளம் l2, கண்டறியப்படுகிறது. r என்பது மின்னழுத்தமானி கம்பியின் ஓரலகு நீளத்திற்கான மின்தடை எனவும் l என்பது கம்பி வழியே பாயும் மின்னோட்டமாகவும் கொண்டால்


சமன்பாடு (2.59) ஐ சமன்பாடு (2.60) ஆல் வகுக்க,


முதன்மைச்சுற்றில் மின்தடை மாற்றியை (Rh) இணைத்து மின்னோட்டத்தை மாற்றி இச்சோதனையை பலமுறை செய்யலாம்.

12 வது இயற்பியல் : அலகு 2 : மின்னோட்டவியல்