Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | மின்னழுத்த மானியை பயன்படுத்தி மின்கலத்தின் அகமின்தடையை அளவிடுதல்

விளக்கம், சூத்திரங்கள், தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள் | கிர்க்காஃப் விதி மற்றும் வீட்ஸ்டோன் சமனச் சுற்று - மின்னழுத்த மானியை பயன்படுத்தி மின்கலத்தின் அகமின்தடையை அளவிடுதல் | 12th Physics : UNIT 2 : Current Electricity

12 வது இயற்பியல் : அலகு 2 : மின்னோட்டவியல்

மின்னழுத்த மானியை பயன்படுத்தி மின்கலத்தின் அகமின்தடையை அளவிடுதல்

மின்கலத்தின் அகமின்தடையை அளவிட, படம் 2.29 ல் காட்டியுள்ளவாறு இணைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மின்னழுத்த மானியை பயன்படுத்தி மின்கலத்தின் அகமின்தடையை அளவிடுதல்

மின்கலத்தின் அகமின்தடையை அளவிட, படம் 2.29 ல் காட்டியுள்ளவாறு இணைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. மின்கலத்தொகுப்பு Bt இன் நேர்மின்முனை மின்னழுத்தமானி கம்பியின் C முனையுடனும் எதிர்மின்முனை சாவி K1 வழியாக D முனையுடனும் இணைக்கப்பட்டுள்ளன. இதுவே முதன்மைச் சுற்றாக அமைகிறது.


 

அகமின்தடை காணவேண்டிய மின்கலம்εஇன் நேர்மின்முனை மின்னழுத்தமானிக் கம்பியின் C முனையுடன் இணைக்கப்படுகிறது. மின்கலத்தின் எதிர்மின்முனையானது கால்வனாமீட்டர், உயர்மின்தடையாக்கி வழியாக தொடுசாவி J உடன் இணைக்கப்படுகிறது. மின்கலம் εன் குறுக்கே ஒரு மின்தடைப்பெட்டி R மற்றும் K2 திறந்த நிலையில் சமன்செய் புள்ளி J கண்டறியப்பட்டு சமன்செய் நீளம் CJ = l1அளவிடப்படுகிறது.

மின்கலமானது திறந்த சுற்றில் அமைவதால் அதன் மின்னியக்கு விசை

 

மின்தடைப்பெட்டி Rல் ஒரு தகுந்த மின்தடையாக்கி (10 என இருக்கட்டும்) தேர்ந்தெடுக்கப்பட்டு K2 சாவி மூடப்படுகிறது. r என்பது மின்கலத்தின் அக மின்தடை என்க. மின்தடை R மற்றும் மின்கலம் வழியே மின்னோட்டம் I ஆனது

I= ε/R+r

Rன் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு

V=ε R/R+r

இந்த மின்னழுத்த வேறுபாடு மின்னழுத்தமானிக்கம்பிக்கு குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாட்டால் சமன்செய்யப்படுகிறது. இந்த நீளத்தை l2 என்க. எனவே


சமன்பாடு (2.62) மற்றும் (2.63) லிருந்து


R, l1 மற்றும் l2 மதிப்புகளை பிரதியிட மின்கலத்தின் அகமின்தடை கண்டறியப்படுகிறது. இச்சோதனையானது R இன் வெவ்வேறு மதிப்புகளுக்கு மீண்டும் செய்யப்படுகிறது. சோதனையின் முடிவுகளின்படி மின்கலத்தின் அகமின்தடை மாறிலியாக அமையாமல் மின்கலத்தின் குறுக்கேயுள்ள புற மின்தடை மதிப்பு அதிகரிக்கும் போது அதிகரிப்பதை காணலாம்.

12 வது இயற்பியல் : அலகு 2 : மின்னோட்டவியல்