Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | கிர்க்காஃப் விதிகள்: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்

12 வது இயற்பியல் : அலகு 2 : மின்னோட்டவியல்

கிர்க்காஃப் விதிகள்: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்

தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்: கிர்க்காஃப் முதல் விதி (மின்னோட்டவிதி அல்லது சந்தி விதி), கிர்க்காஃப் இரண்டாவது விதி (மின்னழுத்த வேறுபாட்டு விதி அல்லது சுற்று விதி),வீட்ஸ்டோன் சமனச் சுற்று,மீட்டர் சமனச்சுற்று

கிர்க்காஃப் முதல் விதி (மின்னோட்டவிதி அல்லது சந்தி விதி): தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்


எடுத்துக்காட்டு 2.20

பின்வரும் மின்சுற்றில் Iன் மதிப்பை கண்டுபிடி.


தீர்வு

மின்சுற்றில் P என்ற புள்ளிக்கு கிர்க்காஃப் முதல் விதியை பயன்படுத்த,

P ஐ நோக்கி செல்லும் அம்புக்குறிகளை (மின்னோட்டத்தை) நேர்குறியாகவும், P விட்டு விலகிச் செல்லும் அம்புக்குறிகளை (மின்னோட்டங்கள்) எதிர்க்குறியாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே,

0.2A - 0.4A + 0.6A - 0.5A + 0.7A - I = 0

1.5A - 0.9A - I = 0

0.6A - I = 0

I = 0.6 A


கிர்க்காஃப் இரண்டாவது விதி (மின்னழுத்த வேறுபாட்டு விதி அல்லது சுற்று விதி) : தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்


எடுத்துக்காட்டு 2.21

பின்வரும் படத்தில் கடத்திகள் சிக்கலான வலைப்பின்னல் வடிவத்தில் அமைக்கப்பட்டு EACE மற்றும் ABCA ஆகிய மூடிய சுற்றுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பிற்கு கிர்க்காஃப் மின்னழுத்த வேறுபாட்டு விதியை பயன்படுத்துக.


தீர்வு

EACE என்ற மூடிய சுற்றுக்கு கிர்க்காஃப் மின்னழுத்த வேறுபாட்டு விதியை பயன்படுத்தினால்

I1R1 + I2R2 + I3R3 = ε

அதேபோல் ABCA எனும் மூடிய சுற்றுக்கு

I4R4 + I5R5 – I2R2 = 0

 

எடுத்துக்காட்டு 2.22

பின்வரும் மின்சுற்றில் 1 மின்தடையாக்கி வழியே பாயும் மின்னோட்டத்தை கணக்கிடுக


தீர்வு

9V மின்கலத்திலிருந்து பாயும் மின்னோட்டத்தை I1 எனக்கொள்வோம். கிர்க்காஃப் மின்னோட்ட விதிப்படி I1 ஆனது I2 மற்றும் (I1 - I2) என சந்தி E இல் பிரிகிறது. இதனை படத்தில் காணலாம்.


EFCBE எனும் மூடிய சுற்றில் கிர்க்காஃப் மின்னழுத்த வேறுபாட்டு விதியை பயன்படுத்த,

1 I2 + 3I1 + 2I1, = 9

5I1 + I2 =9                   (1)                                                                                   

EADFE எனும் மூடிய சுற்றில் கிர்க்காஃப் மின்னழுத்த வேறுபாட்டு விதி (KVR) யை பயன்படுத்த,

3 (I1 - I2) - 1I2= 6

3I1 - 4I2 = 6                 (2)                                                                                                                                        

சமன்பாடு (1) மற்றும் (2) ஆகியவற்றை தீர்க்க, நமக்கு கிடைப்பது

I1 = 1.83 A மேலும் I2 = -0.13 A

எனவே 1 மின்தடையில் மின்னோட்டம் F லிருந்து E க்கு பாயும்.


வீட்ஸ்டோன் சமனச் சுற்று: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்


எடுத்துக்காட்டு 2.23

ஒரு வீட்ஸ்டோன் சமனச்சுற்றில் P = 100, , Q = 1000  மற்றும் R = 40 . கால்வனா மீட்டரில் சுழி விலக்கம் ஏற்பட்டால், S இன் மதிப்பை கணக்கிடுக.

தீர்வு

P/Q = R/S

S=Q/P x R

S =1000/100 x 40 S = 400 

 

எடுத்துக்காட்டு 2.24

படத்தில் உள்ள வீட்ஸ்டோன் சமனச் சுற்று சமநிலையில் இருக்கும் நிலையில் xன் மதிப்பு என்ன ?

P = 500 , Q = 800, R = x + 400,

S = 1000 


தீர்வு

P/Q = R/S

500/800 = x + 400 /1000

x + 400 = 5/8 × 1000

x + 400 = 625

x = 625  400

x = 225 


மீட்டர் சமனச்சுற்று: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்


எடுத்துக்காட்டு 2.25

ஒரு மீட்டர் சமனச்சுற்று ஆய்வில் 15  என்ற படித்தர மின்தடையாக்கி வலது இடைவெளியில் இணைக்கப்பட்டுள்ளது. சமன்செய் நீளங்களின் விகிதம் 3:2 எனில் மற்றொரு இடைவெளியில் உள்ள மின்தடையாக்கியின் மதிப்பைக் காண்க.

தீர்வு



எடுத்துக்காட்டு 2.26

ஒரு மீட்டர் சமனச் சுற்றில், மின்தடைப் பெட்டியில் 10  என்ற அளவு மின்தடை வைக்கப்பட்டுள்ளது. சமன்செய் நீளத்தின் மதிப்பு l1 = 55 cm எனில் தெரியாத மின்தடையின் மதிப்பை கணக்கிடுக.

தீர்வு

Q = 10 

12 வது இயற்பியல் : அலகு 2 : மின்னோட்டவியல்