Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | ஒரு கோணத்தின் கோண இருசமவெட்டி வரைதல்

வடிவியல் | முதல் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு - ஒரு கோணத்தின் கோண இருசமவெட்டி வரைதல் | 7th Maths : Term 1 Unit 5 : Geometry

7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 5 : வடிவியல்

ஒரு கோணத்தின் கோண இருசமவெட்டி வரைதல்

ஒரு கோணத்தை இரு சம அளவுகளாகப் பிரிக்கும் கோடு அல்லது கோட்டுத்துண்டு அக்கோணத்தின் இருசம வெட்டி எனப்படும்.

ஒரு கோணத்தின் கோண இருசமவெட்டி வரைதல்

ஒரு கோணத்தை இரு சம அளவுகளாகப் பிரிக்கும் கோடு அல்லது கோட்டுத்துண்டு அக்கோணத்தின் இருசம வெட்டி எனப்படும்

கீழ்க்காணும் படங்களில் கோண இருசமவெட்டிகளை நாம் காணலாம்.


எடுத்துக்காட்டு 5.12 

80° அளவுடைய ABC இன் கோண இரு சமவெட்டி வரைக

படி 1: பாகைமானியைப் பயன்படுத்தி 80° அளவுள்ளவாறு கோணம் ABC யை அமைக்க

படி 2 : B மையமாகக் கொண்டு ஏதேனும் ஒரு ஆரமுடைய வட்டவில்லை BAC இன் உட்பகுதியில் BA மற்றும் BC முறையே E மற்றும் F இல் வெட்டுமாறு வரைக

படி 3: E மையமாகக் கொண்டு அதே ஆரத்தில் ABC இன் உட்புறத்தில் ஒரு வட்டவில் வரைக. இதே போல் F மையமாகக் கொண்டு முன்பு வரைந்த வட்டவில்லை வெட்டுமாறு மற்றொரு வட்டவில் வரைக

படி 4 : வட்டவிற்கள் வெட்டும் புள்ளியை G எனக் குறிக்க. கதிர் BG வரைக. கதிர் BG, ABC இன் கோண இருசமவெட்டி ஆகும்.


7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 5 : வடிவியல்