வடிவியல் | முதல் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு - வரைதல் | 7th Maths : Term 1 Unit 5 : Geometry
வரைதல்
வடிவியலில், வரைதல் என்பது கோடுகள், கோணங்கள் மற்றும் வடிவங்கள் ஆகியவற்றை மிகச் சரியான அளவில் வரைவதாகும். ஆறாம் வகுப்பில், கோட்டுத்துண்டு வரைதல், கொடுக்கப்பட்ட கோட்டிற்கு இணைகோடு, செங்குத்துக் கோடு வரைதலையும் மற்றும் பாகைமானியைப் பயன்படுத்திக் கோணத்தை அமைத்தலையும் கற்றறிந்தோம்.
இப்பொழுது, கொடுக்கப்பட்ட கோட்டுத்துண்டின் செங்குத்து இரு சமவெட்டி, கொடுக்கப்பட்ட கோணத்தின் இரு சமவெட்டி வரைதலையும்; 60°, 30°, 120°, 90°, 45° ஆகிய கோணங்களைப் பாகைமானியைப் பயன்படுத்தாமல் அமைத்தலையும் கற்போம்.
படங்கள் அனைத்தும் தோராயமான அளவுகளில் வரையப்பட்டுள்ளது.