இந்தியா - வேளாண்மை | புவியியல் | சமூக அறிவியல் - வேறுபடுத்துக. | 10th Social Science : Geography : Chapter 3 : India - Agriculture

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 3 : இந்தியா - வேளாண்மை

வேறுபடுத்துக.

சமூக அறிவியல் : புவியியல் : இந்தியா - வேளாண்மை : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: வேறுபடுத்துக.

VI. வேறுபடுத்துக.

 

1. ராபி பருவம் மற்றும் காரிப் பருவம்.


ராபி பருவம்

1. விதைக்கும் பருவம் அக்டோபர்.

2. அறுவடை காலம் மார்ச்.

3. விளையும் பயிர்கள் : கோதுமை, பருப்பு, நிலக்கடலை, பார்லி.

4. குளிர்காலப் பயிர்.

காரிப் பருவம்

1. விதைக்கும் பருவம் ஜுன்.

2. அறுவடை காலம் செப்டம்பர்.

3. விளையும் பயிர்கள்: நெல், பருத்தி, மக்காச்சோளம், கம்பு.

4. கோடைகாலப் பயிர்.

 

2. வெள்ளப் பெருக்கு கால்வாய் மற்றும் வற்றாத கால்வாய்.


வெள்ளப் பெருக்கு கால்வாய்

1. ஆற்றிலிருந்து நேரடியாக எவ்வித தடுப்பணைகளும் இன்றி தண்ணீர் கால்வாய் மூலம் எடுக்கப்படுகிறது.

2. இவ்வகை கால்வாய்கள் வெள்ளக் காலங்களில் தண்ணீரை திசை திருப்பப் பயன்படுவதோடு மழைக்காலங்களில் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும்.

வற்றாத கால்வாய்

1. இவ்வகை கால்வாய்கள் வற்றாத நதிகளின் குறுக்கே அணைகளை கட்டி நீரின் போக்கை சீர்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வருதலாகும்.

2. இவ்வகை கால்வாய்கள் நீர்ப்பாசனத்திற்கு பயனுள்ளதாக இருக்கிறது.

 

3. கடல் மீன்பிடிப்பு மற்றும் உள்நாட்டு மீன்பிடிப்பு


கடல் மீன் பிடிப்பு

1. கடற்கரைப் பகுதி கடற்கரையை ஒட்டிய பகுதி மற்றும் ஆழ்கடல் முக்கியமானப் பகுதிகளில் 200 மீட்டர் ஆழம் வரை உள்ள கண்டத்திட்டு பகுதிகளில் மீன் பிடித்தல் நடைபெறுகிறது.

2. இது கடற்கரை மாநிலங்களில் கேரளா கடல் மீன் உற்பத்தியில் முதன்மையானதாக உள்ளது.

உள்நாட்டு மீன் பிடிப்பு

1. நீர்த்தேக்கங்களான ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள், குளங்கள் மற்றும் கண்மாய்கள் போன்ற நீர் நிலைகளில் நடைபெறும்.

2. இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம் உள்நாட்டு மீன் பிடித்தலில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.

 

4. வண்டல் மண் மற்றும் கரிசல் மண்.


வண்டல் மண்

1. சிற்றோடைகள் மற்றும் ஆறுகளின் வேகம் குறையும் பொழுது படிய வைத்ததினால் உருவாகின்றன.

2. பொட்டாசியம், பாஸ்பேரிக் அமிலம், சுண்ணாம்பு மற்றும் கார்பன் கலவைகள் அதிகமாக காணப்படுகின்றன. நைட்ரஜன் குறைவாக உள்ளது.

3. காணப்படும் பகுதிகள்: பஞ்சாப், ஹரியானா, கங்கை, உத்திரப்பிரதேசம்

4. வளரும் பயிர்கள்: நெல், கோதுமை, கரும்பு.

கரிசல் மண்

1. தக்காணப் பகுதியில் உள்ள பசால்ட் பாறைகளில் இருந்து உருவானது.

2. கால்சியம், மக்னீசியம், கார்பனேட்டுகள், அதிக அளவிலான இரும்பு, அலுமினியம், சுண்ணாம்பு மற்றும் மாங்கனீசு ஆகியன காணப்படுகின்றன. நைட்ரஜன் பாஸ்பேரிக் அமிலம், இலை மக்குகள் குறைவாக உள்ளன.

3. காணப்படும் பகுதிகள்: மகராஷ்டிரா, மாளவப் பீடபூமி, தெலுங்கானா, கத்தியவார் தீபகற்பம்.

4. வளரும் பயிர்கள்: பருத்தி, திணை, கரும்பு.

 

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 3 : இந்தியா - வேளாண்மை