Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | மூடிய பரப்புகளுக்கு மின்பாயம்

12 வது இயற்பியல் : அலகு 1 : நிலை மின்னியல்

மூடிய பரப்புகளுக்கு மின்பாயம்

இயற்பியல் : நிலை மின்னியல்: காஸ் சட்டம் மற்றும் அதன் பயன்பாடுகள் : மூடிய பரப்புகளுக்கு மின்பாயம்

மூடிய பரப்புகளுக்கு மின்பாயம்

சென்ற பிரிவில், ஏதேனும் ஒரு வடிவமுள்ள வளைபரப்பிற்குரிய மின்பாயத்தைப் பற்றி அறிந்தோம். படம் 1.33 (அ) ல் கொடுத்துள்ளவாறு சீரற்ற மின்புலம் உள்ள பகுதியில் ஒரு மூடிய பரப்பு உள்ளதாகக் கருதுவோம். இம்மூடிய பரப்பிற்கான மின்பாயம்



சமன்பாடு (1.57) மற்றும் சமன்பாடு (1.58) இடையிலான வேறுபாட்டைக் கவனிக்கவும். சமன்பாடு (1.58) ல் பயன்படுத்தப்பட்டுள்ள தொகையிடலானது ஒரு மூடப்பட்ட அல்லது மூடிய பரப்புத் தொகையிடலாகும்; மேலும் அதிலுள்ள ஒவ்வொரு பரப்புக் கூறுக்கும் வரையப்படும் வெளிநோக்கிய செங்குத்துக் கோடே ன் திசையாகும் [படம் 1.33 (ஆ)].

ஒரு மூடிய பரப்பின் மொத்த மின்பாயமானது நேர்க்குறி, எதிர்க்குறி அல்லது சுழி மதிப்பைப் பெற்றிருக்கும்.

படம் 1.33 (ஆ)-ல் ஒரு பரப்புக்கூறு  மின்புலம் யுடன் உருவாக்கும் கோணம் 90° ஐ விடக் குறைவாக உள்ளதால் அதன் மின்பாயம் நேர்க்குறி மதிப்பு உடையதாகவும் இன்னொரு பரப்புக்கூறு  மின்புலத்துடன் உருவாக்கும் கோணம் 90° ஐ விட அதிகமாக உள்ளதால் அதன் மின்பாயம் எதிர்க்குறி மதிப்புடையதாகவும் உள்ளன.

பொதுவாக, மூடிய பரப்பினுள்மின்புலக்கோடுகள் நுழைந்தால் மின்பாயம் எதிர்க்குறி எனவும் மூடிய பரப்பை விட்டு அவை வெளியேறினால் மின்பாயம் நேர்க்குறி எனவும் கொள்ளலாம். 

12 வது இயற்பியல் : அலகு 1 : நிலை மின்னியல்