கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள் | எண்ணியல் | இரண்டாம் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.1 | 7th Maths : Term 2 Unit 1 : Number System

7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்ணியல்

பயிற்சி 1.1

7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்ணியல் : பயிற்சி 1.1 : புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள் :

பயிற்சி 1.1 

1. கீழ்க்கண்ட படவிளக்கத்திற்கு உரிய தசம எண்களை எழுதுக.

தீர்வு : 

(i) 10 - பத்துகள் 

2 - ஒன்றுகள்

2- பத்தில் ஒன்றுகள்

எண் 12.2

 (ii) 2 - பத்துகள் 

1 - ஒன்றுகள் 

3 - பத்தில் ஒன்றுகள் 

எண் 21.3


2. கீழ்க்கண்டவற்றைத் தசம எண்களைப் பயன்படுத்தி சென்டிமீட்டராக மாற்றுக. 

(i) 5 மி.மீ 

(ii) 9 மி.மீ 

(iii) 42 மி.மீ 

(iv) 8 செ.மீ 9 மி.மீ 

(v) 375 மி.மீ

தீர்வு : 

(i) 5 மி.மீ = 5 / 10 செ.மீ = 0.5 செ.மீ

 10 மி.மீ = 1 செ.மீ 

(ii) 9 மி.மீ = 9 / 10 செ.மீ = 0.9 செ.மீ 

(iii) 42 மி.மீ = 42 / 10 செ.மீ = 4.2 செ.மீ

(iv) 8 செ.மீ 9 மி.மீ = 89 / 10 செ.மீ = 8.9 செ.மீ

(v) 375 மி.மீ = 375 / 10 செ.மீ = 37.5 செ.மீ


3. கீழ்க்கண்டவற்றை தசம எண்களைப் பயன்படுத்தி மீட்டரில் குறிப்பிடுக: 

(i) 16 செ.மீ  

(ii) 7 செ.மீ 

(iii) 43 செ.மீ  

(iv) 6 மீ 6 செ.மீ 

(v) 2 மீ 54 செ.மீ 

தீர்வு : 

(i) 16 செ.மீ = 16 / 100 மீ  = 0.16 மீ

100 செ.மீ = 1 மீ

(ii) 7 செ.மீ = 7 / 100 மீ = 0.07 மீ

(iii) 43 செ.மீ = 43 / 100 மீ = 0.43 மீ

(iv) 6 மீ 6 செ.மீ = 606 / 100 மீ = 6.06 மீ

(v) 2 மீ 54 செ.மீ = 254 / 100 மீ = 2.54 மீ


4. கீழ்க்காணும் தசம எண்களை விரிவுக் குறியீட்டு முறையில் எழுதுக. 

(i) 37.3

(ii) 658.37 

(iii) 237.6 

(iv) 5678.358

தீர்வு:

(1) 37.3 = 30 + 7 + (3 / 10)

(ii) 658.37 = 600 + 50 + 8 + (3 / 10) + (7 / 100)

(iii) 237.6 = 200 + 30 + 7 + 6 / 10

(iv) 5678.358 = 5000 + 600 + 70 + 8 + (3 / 10) + (5 / 100) + (8 / 1000)


5. கீழ்க்கண்டவற்றை இடமதிப்பு அட்டவணையில் குறித்து மற்றும் அடிகோடிடப்பட்ட இலக்கத்தின் இடமதிப்பைக் காண்க. 

(i) 53.6

(ii) 263.271 

(iii) 17.39 

(iv) 9.65

(v) 4972.068 

தீர்வு :


(i) 53.61 இல் 6ன் இடமதிப்பு பத்தில் ஒன்று. 

(ii) 263.271ல் 2ன் இடமதிப்பு பத்தில் ஒன்று. 

(iii) 17.39 ல் 9ன் இடமதிப்பு நூறில் ஒன்று. 

(iv) 9.657ல் 5ன் இடமதிப்பு நூறில் ஒன்று. 

(v) 4972.068ல் 8ன் இடமதிப்பு ஆயிரத்தில் ஒன்று.


கொள்குறி வகை வினாக்கள்


6. 85.073 என்ற எண்ணில் 3 இன் இடமதிப்பு ________ 

(i) பத்தில் ஒன்று, 

(ii) நூறில் ஒன்று 

(iii) ஆயிரம்

(iv) ஆயிரத்தில் ஒன்று

விடை : (iii) ஆயிரம்


7. கிராமை கிலோகிராமாக மாற்றுவதற்கு நாம் எவற்றால் வகுக்க வேண்டும்? 

(i) 10000 

(ii) 1000  

(iii) 100

(iv) 10

விடை : (ii) 1000 


8. 30 கிலோகிராம் 43 கிராமுக்குச் சமமான தசம எண் ________ கி.கி 

(i) 30.43 

(ii) 30.430 

(iii) 30.043 

(iv) 30.0043

விடை : (iii) 30.043 


9. மட்டைப்பந்து ஆடுகளத்தின் அகலம் 264 செ.மீ எனில், அது ________ மீட்டருக்குச் சமம். 

(i) 26.4

(ii) 2.64 

(iii) 0.264 

(iv) 0.0264

விடை : (iii) 2.64


விடைகள் :

பயிற்சி  1.1

1. (i) 12.2 (ii) 21.3

2. (i) 0.5 செ.மீ  (ii) 0.9செ.மீ  (iii) 4.2 செ.மீ (iv) 8.9 செ.மீ (v) 37.5 செ.மீ

3. (i) 0.16 மீ (ii) 0.07 மீ (iii) 0.43 மீ  (iv) 6.06 மீ (v) 2.54 மீ

4. (i) 30 + 7 + 3/10 (ii) 600 + 50 + 8 + 3/10 + 7/100 (iii) 200+30+7+  6/10 (iv) 5000 + 600 + 70 + 8 + 3/10 + 5/100 + 8/1000

5. 

 கொள்குறிவகை வினாக்கள் 

6. (iv) ஆயிரம் 

7. (ii) 1000

8. (iii) 30.043

9. (ii) 2.64


7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்ணியல்