Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | பாடச்சுருக்கம்

எண்ணியல் | இரண்டாம் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு - பாடச்சுருக்கம் | 7th Maths : Term 2 Unit 1 : Number System

7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்ணியல்

பாடச்சுருக்கம்

7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்ணியல் : பாடச்சுருக்கம்

பாடச்சுருக்கம்

பத்தில் ஒன்றை (1/10), 0. 1 எனத் தசமக் குறியீட்டு வடிவில் எழுத இயலும்

புள்ளியானது தசமப் புள்ளியைக் குறிக்கும்; அது ஒன்றாம் இடத்திற்கும், பத்தில் ஒன்றாம் இடத்திற்கும் இடையில் அமையும்.

ஓர் எண்ணின் தசம இலக்கங்களின் இடமதிப்புகள் பத்தில் ஒன்று (1/10), நூறில் ஒன்று (1/100)|, ஆயிரத்தில் ஒன்று (1/1000)  ஆகும்.

எந்த எண்ணிலும், ஓர் இலக்கத்திலிருந்து அடுத்த இலக்கத்திற்கு வலப்பக்கமாக நகரும்பொழுது அதன் இடமதிப்பானது 10 ஆல் வகுபடும்

ஒரு பின்னத்தின் பகுதியானது 10, 102, 103,.... இல் ஏதாவது ஒன்று எனில், அவற்றைத் தசமங்களாகக் குறிப்பிட இயலும்

ஒரு பின்னத்தின் பகுதியானது எந்த எண்ணாக இருந்தாலும், அதனைச் சமானப் பின்னங்களின் கருத்தினைப் பயன்படுத்தி 10 இன் அடுக்குகளாக மாற்ற இயலுமாயின், அதனைத் தசமங்களாகக் குறிக்க இயலும்

இரண்டு தசம எண்களை ஒப்பிடுவதற்கு, இலக்கங்களை இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக ஒப்பிட வேண்டும்.


இணையச் செயல்பாடு

செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப் பெறுவது


படி-1: கீழ்க்காணும் உரலி/விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி ஜியோ ஜீப்ரா இணையப் பக்கத்தில் 'எண்ணியல்' என்னும் பணித்தாளிற்குச் செல்லவும். "புதிய கணக்குகள்" என்பதைச் சொடுக்கவும்

படி-2 : சரியான தசம எண்ணைத் தட்டச்சு செய்து உள்ளீடு செய்யவும். மேலும் உள்நுழை (Enter) பொத்தானை அழுத்தவும். விடை சரியானது எனில், 'சரி' எனத் திரையில் தோன்றும் இல்லையெனில், மீண்டும் முயற்சிக்க' எனத் தோன்றும். சரியான விடைகளை உள்ளீடு செய்யவும். மேலும் புதிய கணக்குகளை சொடுக்கவும்



செயல்பாட்டிற்கான உரலி

எண்ணியல் : https://www.geogebra.org/m/f4w7csup#material/p8mc7dfr

அல்லது விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்க.




7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்ணியல்