கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | முழுக்கள் | பருவம் 3 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2.1 | 6th Maths : Term 3 Unit 2 : Integers

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : முழுக்கள்

பயிற்சி 2.1

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : முழுக்கள் : பயிற்சி 2.1 : கோடிட்ட இடங்களை நிரப்புக, சரியா, தவறா எனக் கூறுக, கொள்குறி வகை வினாக்கள், புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 2.1


1. கோடிட்ட இடங்களை நிரப்புக.

i) அருந்தக்கூடிய தண்ணீரானது தரைமட்டத்திலிருந்து 100 மீட்டருக்குக் கீழே கிடைக்கிறது. இதனை ___________ மீ எனக் குறிப்பிடலாம்.

விடை : –100

ii) ஒரு நீச்சல் வீரர், நீச்சல் குளத்தில் தரைமட்டத்திலிருந்து 7அடி ஆழத்திற்குக் குதிக்கிறார். இதனைக் குறிக்கும் முழு ____________ அடி ஆகும்.

விடை : –7

ii) எண்கோட்டில், – 46 என்பது – 35 இக்கு ________________ புறமாக அமையும்.

விடை : இடது

iv) −5 முதல் +5 வரையிலான (இரு எண்களையும் உள்ளடக்கி) முழுக்களின் எண்ணிக்கை ______________.

விடை : 11

v) _______________ ஆனது மிகை முழுவும் அல்ல, குறை முழுவும் அல்ல.

விடை : 0


2. சரியா, தவறா எனக் கூறுக.

i) –18, 6, –12, 0 ஆகிய முழுக்கள் ஒவ்வொன்றும் –20 விடப் பெரியது.

விடை : சரி

ii) −1 ஆனது 0 இக்கு வலது புறம் அமையும்.

விடை : தவறு

iii) −10 மற்றும் 10 ஆகியவை 1 இலிருந்து சம தொலைவில் உள்ளன.

விடை : தவறு

iv) எல்லாக் குறை எண்களும் பூச்சியத்தை விடப் பெரிதானவை.

விடை : தவறு

v) எல்லா முழு எண்களும் முழுக்களே.

விடை : சரி


3. ஓர் எண்கோட்டை வரைந்து, 4, – 3, 6, – 1 மற்றும் –5 ஆகிய முழுக்களை அதன் மீது குறிக்கவும்

விடை



4. எண்கோட்டில்

i) –7 என்ற எண்ணிற்கு 4 அலகுகள் தொலைவில் வலதுபுறத்தில் இருக்கும் எண் என்ன? விடை :  –3

ii) 3 என்ற எண்ணிற்கு 5 அலகுகள் தொலைவில் இடதுபுறத்தில் இருக்கும் எண் என்ன? விடை :  –2


5. பின்வரும் எண்களுக்கு எதிரெண் காண்க.

i) 44

ii) –19

iii) 0

iv) –312

v) 789

விடை

i) –44  ii) 19 iii) 0   iv) 312  v) –789


6. +15 கி.மீ என்பது ஓர் இடத்திலிருந்து 15 கி.மீ கிழக்கைக் குறிக்கும் எனில், அந்த இடத்திலிருந்து 15 கி.மீ மேற்கை எவ்வாறு குறிக்கலாம்?

விடை : –15 கி.மீ


7. பின்வரும் எண்கோடுகளில், எவை சரியாகவும், எவை தவறாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதைக் காரணத்துடன் கூறுக.


விடை

i) தவறு, முழுக்கள் தொடர்ச்சியாக குறிப்பிடவில்லை .

 ii) சரி. முழுக்கள் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

iii) தவறு. –2 தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.

iv) சரி. முழுக்கள் சமதொலைவில் குறிப்பிடப்பட்டுள்ளது

v) தவறு. குறை முழுக்கள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.


8. கொடுக்கப்பட்ட எண்களுக்கு இடையே உள்ள அனைத்து முழுக்களையும் எழுதுக.

i) 7 மற்றும் 10

ii) –5 மற்றும் 4

iii) –3 மற்றும் 3

iv) –5 மற்றும் 0

விடை

i) 8, 9 

ii) –4, –3,–2, –1, 0, 1, 2, 3 

iii) –2, –1, 0, 1, 2 

iv) –4, –3, –2, –1 


9. பெட்டியில், <, > அல்லது = எனப் பொருத்தமான குறியீட்டை இடுக.


விடை : i) <   ii) <   iii) >   iv) =    v) >


10. பின்வரும் முழுக்களை ஏறு வரிசையில் எழுதுக.

i) –11, 12, –13, 14, –15, 16, –17, 18, –19, –20

ii) –28, 6, –5, –40, 8, 0, 12, −1, 4, 22

iii) –100, 10, –1000, 100, 0, –1, 1000, 1, –10

விடை

i) –20, –19,–17,–15, –13, –11, 12, 14, 16, 18

ii) –40, –28, –5, –1, 0, 4, 6, 8, 12, 22

iii) –1000, –100, –10,–1, 0, 1, 10, 100, 1000


11. பின்வரும் முழுக்களை இறங்கு வரிசையில் எழுதுக

i) 14, 27, 15, –14, –9, 0, 11, –17

ii) –99,–120, 65, –46, 78, 400, –600

iii) 111, –222, 333, –444, 555, –666, 777, –888

விடை

i) 27, 15, 14, 11, 0, –9, –14, –17 

ii) 400, 78, 65, –46, –99, –120, –600

iii) 777, 555, 333, 111, –222, –444, –666, –888



கொள்குறி வகை வினாக்கள்


12. –5 முதல் 6 வரையிலான எண்களில் ___________ மிகை முழுக்கள் உள்ளன.

) 5

) 6

) 7

) 11

[விடை : ) 7]


13. பூச்சியத்திற்கு இடது புறம் 20 அலகுகள் தொலைவில் உள்ள எண்ணின் எதிரெண் 

) 20

) 0

) –20

) 40

[விடை : ) 20]


14. –7 இன் வலதுபுறம் 1 அலகு தொலைவில் உள்ள எண்

) +1

) –8

) –7

) –6

[விடை : ) –6]


15. 1 இன் இடதுபுறம் 3 அலகு தொலைவில் உள்ள எண்

) –4

) –3

) –2

) 3

[விடை : ) –2]


16. எந்த ஓர் எண்ணின் நிலையையும் அதன் எதிரெண்ணையும் தீர்மானிக்கும் எண் 

) –1

) 1

) 0

) 10

[விடை : ) 0]


6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : முழுக்கள்