Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | பாடச் சுருக்கம்

முழுக்கள் | பருவம் 3 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பாடச் சுருக்கம் | 6th Maths : Term 3 Unit 2 : Integers

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : முழுக்கள்

பாடச் சுருக்கம்

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : முழுக்கள் : பாடச் சுருக்கம்

பாடச் சுருக்கம்

• ...−3, −2, −1, 0, 1, 2, 3,... என்ற எண்களின் தொகுப்பு 'முழுக்கள்' எனப்படும். இந்த எண் தொகுப்பை Z என்ற எழுத்தால் குறிப்பிடுகிறோம்.

• 0 என்பது மிகை முழுவும் அல்ல குறை முழுவும் அல்ல. ஆகையால், அதற்குக் குறியீடு எதுவும் இல்லை.

எண்கோட்டில் 0 இக்குச் சம தொலைவில் இரு எண்கள் எதிரெதிர் திசைகளில் இருக்குமானால், அவை ஒன்றுக்கொன்று 'எதிரெண்' எனப்படும்.

இயல்எண்களை மிகை முழுக்கள் என்றும், முழு எண்களைக் குறையற்ற முழுக்கள் என்றும் அழைக்கப்படும்.

மிகை மற்றும் குறை எண்களின் தொகுப்பானது 'குறியீட்டு எண்கள்' எனப்படும்.

குறியீட்டு எண்கள் 'திசை எண்கள்' என்றும் அழைக்கப்படும்.




இணையச் செயல்பாடு

முழுக்கள்

செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப் பெறுவது


படி 1:

கீழ்காணும் உரலி/விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி Geo Gebra இணையப் பக்கத்தில் முழுக்கள் என்னும் பணித்தாளிற்குச் செல்லவும். எண் கோட்டின் அடிப்படை எனும் பணித்தாள் இடம் பெற்றிருக்கும்.

படி 2:

புதிய கேள்வியை பெற 'New Number' ஐச் சொடுக்கவும். முன்னி மற்றும் தொடரியைக் காண அடுத்துள்ள தகுந்த பெட்டியில் விடையை தட்டச்சு செய்து ' உள்நுழை (enter)' அழுத்தவும்.


செயல்பாட்டிற்கான உரலி:

முழுக்கள்: https://ggbm.at/mt7qxxn7 அல்லது விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்க.

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : முழுக்கள்