எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2. 2 (எண்களின் இடமதிப்பு) | 5th Maths : Term 1 Unit 2 : Numbers
பயிற்சி 2. 2
1. கீழ்க்காணும் எண்களைப் படித்து சரியான பிரிவுகளில் காற்புள்ளி இட்டு அவற்றின் எண் பெயர்களை எழுதுக.
அ) 15731997
விடை :
1,57,31,997: ஒருகோடியே ஐம்பத்தேழு இலட்சத்து முப்பத்தொன்றாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஏழு
ஆ)
341964
விடை:
3,41,964 : மூன்று இலட்சத்து நாற்பத்து ஒன்றாயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து நான்கு
இ) 29121972
விடை:
2,91,21,972 : இரண்டு கோடியே தொண்ணூற்று ஒரு இலட்சத்து இருபத்து ஒன்றாயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி இரண்டு
ஈ) 347810
விடை:
3,47,810: மூன்று இலட்சத்து நாற்பத்தேழாயிரத்து எண்ணூற்று பத்து.