இரு மாறிகளில் அமைந்த நேரியச் சமன்பாடு (Linear Equation in Two Variables), எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | இயற்கணிதம் | கணக்கு - பயிற்சி 3.12: நீக்கல் முறையில் தீர்வு காணுதல் (Solving by Elimination Method) | 9th Maths : UNIT 3 : Algebra
பயிற்சி 3.12
1. நீக்கல் முறையில் தீர்வு காண்க
(i) 2x−y = 3; 3x + y =7
(ii) x−y = 5; 3x + 2y = 25
(iii) x/10 + y/5 = 14; x/8 + y/6 =15
(iv) 3(2x+y) = 7xy; 3(x+3y) = 11xy
(v) 4/x + 5y = 7; 3/x + 4y = 5
(vi) 13x+1ly = 70; 11x+13y =74




2. A மற்றும் B ஆகியோரது மாத வருமானங்களின் விகிதம் 3:4 ஆகவும் அவர்களுடைய செலவுகளின் விகிதம் 5:7 ஆகவும் இருக்கின்றன. ஒவ்வொருவரும் மாதம் ₹5,000 சேமிக்கிறார்கள் எனில், அவர்களுடைய மாத வருமானத்தைக் காண்க.

3. 5 வருடங்களுக்கு முன்பு, ஒருவருடைய வயதானது அவருடைய மகனின் வயதைப் போல் 7 மடங்காகும். 5 வருடங்கள் கழித்து அவருடைய வயதானது மகனின் வயதைப் போல் 4 மடங்காக இருக்கும் எனில், அவர்களுடைய தற்போதைய வயது என்ன?
