Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | காரணிகளும் மடங்குகளும்

எண்கள் | பருவம் 2 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - காரணிகளும் மடங்குகளும் | 5th Maths : Term 2 Unit 2 : Numbers

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்

காரணிகளும் மடங்குகளும்

கவிதா தன் வீட்டிலிருந்து 12 லட்டுகள் கொண்டு வந்திருந்தாள். அவள் தன் நண்பர்களுக்கு ஆளுக்கொரு லட்டு கொடுத்தாள். லட்டுகள் மீதமில்லாமல் 12 நண்பர்களுக்குக் கொடுக்க முடிந்தது.

காரணிகளும் மடங்குகளும்

கவிதா தன் வீட்டிலிருந்து 12 லட்டுகள் கொண்டு வந்திருந்தாள். அவள் தன் நண்பர்களுக்கு ஆளுக்கொரு லட்டு கொடுத்தாள். லட்டுகள் மீதமில்லாமல் 12 நண்பர்களுக்குக் கொடுக்க முடிந்தது.

அவள் ஒருவருக்கு 2 லட்டுகள் வீதம் கொடுத்திருந்தால் மீதமில்லாமல் 6 நண்பர்களுக்கு கொடுக்க முடியும்.

அவள் ஒருவருக்கு 3 லட்டுகள் வீதம் கொடுத்திருந்தால் மீதமில்லாமல் 4 நண்பர்களுக்கு கொடுக்க முடியும். இதுபோல் லட்டுகள் மீதமில்லாதவாறு எத்தனை நண்பர்களுக்கு அவளால் பகிர்ந்தளிக்க முடியும்? இதுபோல் அவளால் ஒவ்வொருவருக்கும் 4 லட்டுகள், 6 லட்டுகள் அல்லது 12 லட்டுகள் கொடுத்திருக்க முடியும்.

ஆகவே, 12 மீதமில்லாமல் வகுக்ககூடிய எண்கள் 1, 2, 3, 4, 6 மற்றும் 12 ஆகும்.


ஓர் எண்ணை மீதமின்றி வகுக்கும் எண்கள் அவ்வெண்ணின் காரணிகள் எனப்படும்


முயன்று பார்

காரணிகளைக் கண்டறிக.

4 இன் காரணிகள் 1, 2 மற்றும் 4

10 இன் காரணிகள் 1, 2 , 5 மற்றும் 10

16 இன் காரணிகள் 1, 2 , 4, 8 மற்றும் 16

18 இன் காரணிகள் 1, 2 , 3, 6 ,9 மற்றும் 18

20 இன் காரணிகள் 1, 2 , 4, 5, 10 மற்றும் 20

24 இன் காரணிகள் 1, 2 , 3, 4, 6, 8, 12 மற்றும் 24

42 இன் காரணிகள் 1, 2 , 3, 6, 7, 14, 21 மற்றும் 42


மற்றொரு முறை 

18 இன் காரணிகளைக் கண்டறிக.


1, 2, 3, 6, 9 மற்றும் 18 ஆகியன 18 இன் காரணிகள்.

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்