Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | சுருக்கமாக விடையளி

மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை | பொருளியல் | சமூக அறிவியல் - சுருக்கமாக விடையளி | 9th Social Science : Economics : Understanding Development: Perspectives, Measurement and Sustainability

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை

சுருக்கமாக விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : சுருக்கமான விடை தருக.

IV. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.


1. மேம்பாடு என்பதற்கு நீங்கள் என்ன பொருள் கொள்கிறீர்கள்?

விடை:

மேம்பாடுஎன்பது ஒரு குறிப்பிட்டத் துறையின் அல்லது குறிப்பிட்ட நபரின் மேம்பாட்டைக் குறிக்கிறது.

 

2. பொருளாதார மேம்பாட்டின் குறியீடுகள் என்ன?

விடை:

நிகர நாட்டு உற்பத்தி

தனி நபர் வருமானம்

வாங்கும் திறன் சமநிலை

மனிதவள மேம்பாட்டுக் குறியீடு

 

3. ஒரு நாட்டின் வளர்ச்சியைப் பிற நாடுகளுடன் ஒப்பிடுவதற்கு நிகர நாட்டு உற்பத்தி பயனுள்ள அளவீடாகக் கருதப்படாதது ஏன்?

விடை:

நாடுகளின் வளர்ச்சியினை ஒப்பிட மொத்த வருவாயைக் (நிகர நாட்டு உற்பத்தி கணக்கிடுவது ஒரு பயனுள்ள நடவடிக்கையாக இருக்க முடியாது. ஏனெனில்,

ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு இன மக்கள் வாழ்கிறார்கள். நாட்டின் மொத்த வருவாயை ஒப்பிட்டு சராசரி தனிநபர் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது என்றும் சொல்ல முடியாது.

ஒவ்வொரு நாட்டிலுள்ள மக்களைவிட வேறொரு நாட்டில் உள்ள மக்களிடையே நல்ல வருமானம் உள்ளது.

 

4. எந்த ஒரு நாட்டினுடைய முதன்மை வளமாக மனிதவளம் கருதப்படுவது ஏன்?

விடை:

எந்த ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் மனிதவளம் அவசியமாகும். மனித வளத்தில் கல்வி மற்றும் உடல் நலத்தில் செய்யப்படும் முதலீடு எதிர்காலத்தில் உயர்ந்த வருமானத்தை அளிக்கலாம்.

உதாரணமாக ஒரு குழந்தையின் கல்விக்கு அளிக்கப்படும் முதலீடு, உற்பத்தியின் மூலம் சமூகத்திற்குப் பெரும் பங்களிப்பைத் தந்து அதிக வருமானம் அளிக்க முடியும்.

 

5. பின்வருவனவற்றை விரிவாக்கம் செய்க.

1. PPP

2. HDI

விடை:

1. PPP = Purchasing Power Parity (வாங்கும் திறன் சமநிலை)

2. HDI = Human Development Index (மனித மேம்பாட்டு குறியீட்டெண்)

 

6. பின்வருவனவற்றை விரிவாக்கம் செய்க.

1. NNP

2. PCI

விடை:

1. NNP= Net National Product (நிகர நாட்டு உற்பத்தி

2. PCI = Per Capita Income (Goun UULITOOTLD)

 

7. சூரிய சக்தி என்றால் என்ன?

விடை:

சூரிய சக்தி என்பது சூரிய ஒளி மூலம் மின்சக்தியை நேரடியாக சூரிய ஒளியின் மின்னழுத்த செல்கள் மூலம் உற்பத்தி செய்து பயன்படுத்துவதாகும்.

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை