Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | மின்னல் தாங்கி அல்லது மின்னல் கடத்தி

கூர்முனைச் செயல்பாடு அல்லது ஒளிவட்ட மின்னிறக்கம் - மின்னல் தாங்கி அல்லது மின்னல் கடத்தி | 12th Physics : UNIT 1 : Electrostatics

12 வது இயற்பியல் : அலகு 1 : நிலை மின்னியல்

மின்னல் தாங்கி அல்லது மின்னல் கடத்தி

இயற்பியல் : நிலை மின்னியல் : கூர்முனைச் செயல்பாடு அல்லது ஒளிவட்ட மின்னிறக்கம் : மின்னல் தாங்கி அல்லது மின்னல் கடத்தி

மின்னல் தாங்கி அல்லது மின்னல் கடத்தி

உயரமான கட்டடங்களை மின்னல் வெட்டுகளிலிருந்து பாதுகாக்க உதவும் ஒரு கருவி மின்னல் கடத்தி இது கட்டத்தின் வழியே தரைக்குச்செல்லும் ஒரு நீண்ட, தடித்த தாமிரத் தண்டினைக் கொண்டுள்ளது.அதன் மேல்முனையில் கூர்முனையுடைய ஊசிகள் பொருத்தப்பட்டுள்ளன [படம் 1.62 (அ)]

தண்டின் கீழ் முனையானது அதிக ஆழத்தில் புதைக்கப்பட்டுள்ள தாமிரத் தட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. எதிர் மின்னூட்டம் பெற்ற மேகம் கட்டடத்தின் மேல் செல்லும் போது, கடத்தியின் கூர்முனைகளில் நேர் மின்னூட்டம் தூண்டப்படுகிறது.

கூர் முனைகளில் தூண்டப்படும் மின் துகள்களின் அடர்த்தி அதிகமாதலால் கூர்முனைச் செயல்பாடு நிகழ்கிறது. நேர் மின்னூட்டம் பெற்றுள்ள இந்த மின்துகள்கள் கூர்முனைகளுக்கு அருகிலுள்ள காற்று மூலக்கூறுகளை அயனியாக்கம் செய்கின்றன. இதன்மூலம் உருவாகும் நேர் மின்னூட்டங்கள்மேகத்திலுள்ள எதிர் மின்னூட்டத்தின் ஒரு பகுதியை சமன்செய்கிறது. கூர்முனைகளை நோக்கி விரட்டப்பட்ட எதிர் மின்துகள்கள், தாமிரத் தண்டின் வழியே புவியை நோக்கி செல்கின்றன. மின்னல் கடத்தி மின்னலைத் தடுப்பதில்லை. மாறாக தரையை நோக்கி மின்னலைத் திருப்புவதன் மூலம் கட்டடங்களைப் பாதுகாக்கிறது [படம் 1.62 (ஆ )]

 

12 வது இயற்பியல் : அலகு 1 : நிலை மின்னியல்