தாவரவியல் - பூக்கும் தாவரத்தின் பாகங்கள் | 11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm
பூக்கும்
தாவரத்தின் பாகங்கள்
பூக்கும் தாவரங்கள் மூடுவிதைத்தாவரங்கள் (ஆஞ்சியோஸ்பெர்ம்கள்)
அல்லது மேக்னோலியோஃபைட்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை ஸ்போரோஃபைட் நிலையிலுள்ளவை.
இவற்றின் அச்சு நிலத்தடி வேரமைவையும்,
நிலமேல் தண்டமைவையும் பெற்றிருக்கின்றது.
தண்டமைவு தண்டு, கிளைகள் மற்றும் இலைகளுடன் கூடியது. வேரமைவு வேர் மற்றும் பக்க வேர்களைக்
கொண்டது.
