Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | தண்டு கிளைத்தல்

தண்டின் உருமாற்றம் - தண்டு கிளைத்தல் | 11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm

11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல்

தண்டு கிளைத்தல்

தண்டில் கிளைகள் அமைந்திருக்கும் முறைக்கு கிளைத்தல் என்று பெயர். நுனி ஆக்குத்திசுக்களே கிளைத்தலை நிர்ணயிக்கின்றன.

தண்டு கிளைத்தல் (Stem branching)

தண்டில் கிளைகள் அமைந்திருக்கும் முறைக்கு கிளைத்தல் என்று பெயர். நுனி ஆக்குத்திசுக்களே கிளைத்தலை நிர்ணயிக்கின்றன. வளரும் முறையைப் பொறுத்துத் தண்டானது வரம்பற்ற கிளைத்தலையும் வரம்புடைய கிளைத்தலையும் கொண்டுள்ளது


1. வரம்பற்ற கிளைத்தல்/ஒருபாதக் கிளைத்தல் (Indeterminate / Monopodial branching):

இவற்றில் நுனி மொட்டானது தடையின்றி தொடர்ந்து வளர்ந்து கொண்டே சென்று பல பக்கவாட்டுக் கிளைகளை உருவாக்குகிறது. இவ்வகை கிளைத்தலுக்கு வரம்பற்ற கிளைத்தல் என்று பெயர். எடுத்துக்காட்டு: பாலியால்தியா, ஸ்வைடீனியா (மகோகனி), ஆன்ட்டியாரிஸ்.

 

2. வரம்புடைய கிளைத்தல்/பல பாதக் கிளைத்தல் (Determinate/ Sympodial branching):

இவற்றில் நுனி மொட்டானது சிலகால வளர்ச்சிக்குப் பிறகு நின்றுவிடுகிறது. பின்னர் தாவரத்தின் வளர்ச்சியானது பக்க ஆக்குத்திசுக்களின் மூலமாகவோ மொட்டுகளின் மூலமாகவோ மேற்கொள்ளப்படுகிறது. இவ்வகை கிளைத்தலுக்கு வரம்புடைய கிளைத்தல் என்று பெயர். எடுத்துக்காட்டு: சைகஸ்.


11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல்