எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - எண்களின் இடமதிப்பு | 5th Maths : Term 1 Unit 2 : Numbers
எண்களின் இடமதிப்பு
1. காற்புள்ளி அல்லது பிரிவுகளின் முக்கியத்துவம்
4 இலக்கம் மற்றும் அதற்கு மேல் உள்ள இலக்கங்களைக் கொண்ட எண்களை எளிதாக படிப்பதற்கு பிரிவுகளாக பிரித்து காற்புள்ளி இடுகிறோம்.

இடமதிப்பு முறையில் ஒன்றுகள், பத்துகள் மற்றும் நூறுகளை ஒன்றுகள் என்ற பிரிவிலும், ஆயிரங்கள் மற்றும் பத்தாயிரங்களை ஆயிரத்தின் பிரிவிலும், லட்சங்கள் மற்றும் பத்து இலட்சங்களை இலட்சப்பிரிவிலும், கோடி மற்றும் பத்து கோடிகளை கோடி என்ற பிரிவிலும் எழுதுகிறோம். இப்பிரிவுகளை காற்புள்ளிக் கொண்டு பிரிக்கிறோம்.
1. 99,15,797
2. 2,30,145
3. 1,34,19,922