Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | கவிதைப்பேழை: புதுமை விளக்கு: கேள்விகள் மற்றும் பதில்கள்

பொய்கை ஆழ்வார் | பருவம் 3 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: புதுமை விளக்கு: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 3 Chapter 2 : Oppuravu olluku

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு

கவிதைப்பேழை: புதுமை விளக்கு: கேள்விகள் மற்றும் பதில்கள்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு : கவிதைப்பேழை: புதுமை விளக்கு: கேள்விகள் மற்றும் பதில்கள் - பொய்கை ஆழ்வார் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

(இயல் 2 : கவிதைப் பேழை : புதுமை விளக்கு)


பாடநூல் மதிப்பீட்டு வினா 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. “இடர் ஆழி நீங்குகவே” - இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

அ) துன்பம் 

ஆ) மகிழ்ச்சி 

இ) ஆர்வம் 

ஈ) இன்பம் 

[விடை : அ. துன்பம்]


2. 'ஞானச்சுடர்' என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது ________

அ) ஞான + சுடர்

ஆ) ஞானச் + சுடர் 

இ) ஞானம் + சுடர்

ஈ) ஞானி + சுடர்

[விடை : இ. ஞானம் + சுடர்]


3. இன்பு + உருகு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ________

அ) இன்புஉருகு

ஆ) இன்பும் உருகு 

இ) இன்புருகு

ஈ) இன்பருகு

[விடை : இ. இன்புருகு]


பொருத்துக.

வினா : 

1. அன்பு - நெய்

2. ஆர்வம் – தகளி

3. சிந்தை - விளக்கு 

4. ஞானம் - இடுதிரி

விடை :

1. அன்பு - தகளி

2. ஆர்வம் - நெய்

3. சிந்தை - இடுதிரி

4. ஞானம் - விளக்கு


குறு வினா 

1. பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் அகல்விளக்காக எவற்றை உருவகப்படுத்துகின்றனர்?

பொய்கையாழ்வார் அகல்விளக்காகப் பூமியையும், பூதத்தாழ்வார் அகல்விளக்காக அன்பையும் உருவகப்படுத்துகின்றனர்.

2. பொய்கைஆழ்வார் எதற்காகப் பாமாலை சூட்டினார்? 

பொய்கைஆழ்வார் தன் துன்பக்கடல் நீங்க வேண்டிப் பாடலால் மாலை சூட்டினார்.


சிறுவினா

1. பூதத்தாழ்வார் ஞானவிளக்கு ஏற்றும் முறையை விளக்குக.

ஞானத்தமிழ் பயின்ற பூதத்தாழ்வார் அன்பையே அகல்விளக்காகவும், ஆர்வத்தையே நெய்யாகவும், இனிமையால் உருகும் மனத்தையே இடுகின்ற திரியாகவும் கொண்டு, ஞான ஒளியாகிய சுடர்விளக்கை மனம் உருக திருமாலுக்கு ஏற்றினார்.


சிந்தனை வினா 

1. பொய்கையாழ்வார் ஞானத்தை விளக்காக உருவகப்படுத்துகிறார். நீங்கள் எவற்றை எல்லாம் விளக்காக உருவகப்படுத்துவீர்கள்?

நான் அறிவு, தன்னம்பிக்கை, முயற்சி, கடின உழைப்பு, ஊக்கம், கல்வி, உயிர், உண்மை ஆகியற்றையெல்லாம் விளக்காக உருவகப்படுத்துவேன்.



கற்பவை கற்றபின்


பன்னிரு ஆழ்வார்களின் பெயர்களைத் திரட்டுக. 

பொய்கை ஆழ்வார்

பூதத்தாழ்வார் 

பேயாழ்வார் 

திருமழிசை ஆழ்வார்

நம்மாழ்வார் 

மதுரககி ஆழ்வார்

பெரியாழ்வார்

ஆண்டாள் 

திருமங்கை ஆழ்வார் 

தொண்டரடிப் பொடியாழ்வார் 

திருப்பாணாழ்வார் 

குலசேகர ஆழ்வார்.

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு