Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | நிலையான மேம்பாட்டிற்கான கொள்கைகள்

பொருளியல் - நிலையான மேம்பாட்டிற்கான கொள்கைகள் | 9th Social Science : Economics : Understanding Development: Perspectives, Measurement and Sustainability

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை

நிலையான மேம்பாட்டிற்கான கொள்கைகள்

இந்தியாவின் மின்சார தேவைகளைப் பூர்த்தி செய்ய அனல் மின்சார மற்றும் புனல் மின்சார நிலையங்களைச் சார்ந்திருக்கிறது.

நிலையான மேம்பாட்டிற்கான கொள்கைகள்

 

மரபு சாரா வளங்களை பயன்படுத்துதல்

இந்தியாவின் மின்சார தேவைகளைப் பூர்த்தி செய்ய அனல் மின்சார மற்றும் புனல் மின்சார நிலையங்களைச் சார்ந்திருக்கிறது. இந்த இரண்டு உற்பத்தி நிலையங்களும் பாதகமான சுற்றுச்சூழல் தாக்கத்தைக் கொண்டுள்ளன. அனல் மின் நிலையம் சூழலை மாசுபடுத்தும் அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றி சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது.

 

இந்தியாவில் சூரிய சக்தி

சூரிய சக்தி என்பது சூரிய ஒளி மூலம் மின்சக்தியை நேரடியாக சூரிய ஒளியின் மின்னழுத்த செல்கள் மூலம் உற்பத்தி செய்து பயன்படுத்தப்படுத்துவதாகும். சூரிய ஒளி தகடுகள் சூரிய ஒளியினை மின் சக்தியாக மாற்ற சூரிய ஒளியை வேதி வினைக்கு உட்படுத்தி ஆற்றலாக மாற்றுகிறது. சூரிய மின் தகடு அமைப்பின் மூலம், வீடு மற்றும் அலுவலகத்திற்கு தேவையான மின்சாரம் தயாரிக்க முடியும். இந்த சூரிய மின் சக்தி அமைப்புகள் பெரும்பாலும் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் மின் செலவைக் குறைக்க அவர்களால் நிறுவப்படுகின்றன.

சூரிய சக்தி உற்பத்தி தொழில், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழ்நாடு அதிக அளவில் சூரிய மின்தகடு அமைப்பு (Solar Panels) கொண்ட மாநிலமாக உள்ளது. இந்தியாவில் சூரிய சக்தி மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் முன்னணியில் உள்ளது. தமிழகத்தில் 2017ஆம் ஆண்டு சூலை 31ஆம் நாள் வரை நிறுவப்பட்ட சூரிய அமைப்புகளின் மூலம் பெற்றமின் திறன் 1897 மெகாவாட் ஆகும்.


9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை