Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | டெரிடோஃபைட்டுகள்

தாவர உலகம் | அலகு 17 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - டெரிடோஃபைட்டுகள் | 8th Science : Chapter 17 : Plant Kingdom

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 17 : தாவர உலகம்

டெரிடோஃபைட்டுகள்

டெரிடோஃபைட்டுகளே சைலம் மற்றும் புளோயம் திசுக்களைக் கொண்டுள்ள முதலாவது உண்மையான நிலத் தாவரங்களாகும். எனவே, இவை கடத்துத் திசுக்களைக் கொண்ட பூவாத் தாவரங்கள் எனப்படுகின்றன.

டெரிடோஃபைட்டுகள்

டெரிடோஃபைட்டுகளே சைலம் மற்றும் புளோயம் திசுக்களைக் கொண்டுள்ள முதலாவது உண்மையான நிலத் தாவரங்களாகும். எனவே, இவை கடத்துத் திசுக்களைக் கொண்ட பூவாத் தாவரங்கள் எனப்படுகின்றன. இதன் உடலானது தண்டு, வேர் மற்றும் இலை என பிரிக்கப்பட்டுள்ளது.

இவற்றிலும் சந்ததி மாற்றம் நடைபெறுகிறது. இருமய ஸ்போரோஃபைட் நிலையானது ஒருமய கேமீட்டோஃபைட் நிலையுடன் மாறி மாறிக் காணப்படுகிறது. ஸ்போரோஃபைட் சந்ததி ஓங்குதன்மை கொண்டது. ஸ்போரோஃபைட்டானது ஸ்போர்கள் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது. ஸ்போர்கள் வித்தகத்தினுள் உருவாகின்றன. வித்தகத்தை உருவாக்கும் இலைகள், வித்தக இலைகள் எனப்படும். பெரும்பாலும் அனைத்துத் தாவரங்களும் ஒரே வகையான ஸ்போரை (ஹோமோஸ்போரஸ் = ஒரே ஸ்போர்கள்) உருவாக்குகின்றன. அது மைக்ரோ ஸ்போராகவோ அல்லது மெகா ஸ்போராகவோ இருக்கலாம். சில தாவரங்கள் மைக்ரோ ஸ்போர் மற்றும் மெகா ஸ்போர் எனப்படும் இரண்டு வகையான ஸ்போர்களையும் (ஹெட்டிரோஸ்போரஸ் இரு வேறுபட்ட ஸ்போர்கள்) உருவாகின்றன.

ஸ்போர் முளைத்து புரோதாலஸ் எனப்படும் கேமீட்டோஃபைட் சந்ததியை உருவாக்குகிறது. அது தன்னிச்சையாக, குறுகிய நாள் வாழக்கூடியது. கேமீட்டோஃபைட்டானது பல செல்கள் உடைய இனப்பெருக்க உறுப்புகளைத் தோற்றுவிக்கிறது. ஆந்திரீடியம் நகரக் கூடிய ஆண் இன செல்லை உற்பத்தி செய்கிறது. ஆர்க்கிகோனியம் முட்டையை உற்பத்தி செய்கிறது. நகரக் கூடிய ஆண் இன செல் கருவுறுதலின்போது முட்டையுடன் இணைந்து இருமய கரு முட்டையை உற்பத்தி கருமுட்டையானது கருவாக மாற்றமடைகிறது. அது மீண்டும் ஸ்போரோஃபைட்டாக வளர்ச்சி அடைகிறது.

 

1. டெரிடோஃபைட்டாவின் வகைப்பாடு

டெரிடோஃபைட்டுகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை:

1. சைலாப்சிடா (எ.கா. சைலோட்டம்)

2. லைக்காப்சிடா (எ.கா. லைக்கோபோடியம்)

3. ஸ்பீனாப்சிடா (எ.கா. ஈகுசீட்டம்)

4. டீராப்சிடா (எ.கா. நெஃரோலெப்பிஸ்


மேலும் தெரிந்து கொள்க

லைக்கோபோடியம், கிளப் மாஸ் எனப்படுகிறது. ஈக்விசிட்டம் குதிரை வால் எனப்படுகிறது.


2. டெரிடோஃபைட்டாவின் பொருளாதார முக்கியத்துவம்

• பெரணிகள் அழகுக் தாவரங்களாக வளர்க்கப்படுகின்றன.

• டிரையாப்டரிஸில் உள்ள மட்ட நிலத் தண்டு மற்றும் இலைக் காம்புகள் குடற்புழுக் கொல்லியாகப் பயன்படுகின்றன.

• மார்சீலியாவின் ஸ்போரகக் கனிகளை சிலர் உணவாகப்பயன்படுத்துகின்றனர்.



8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 17 : தாவர உலகம்