Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | தசம எண்களை எண்கோட்டில் குறித்தல் (Representing Decimal Numbers on the Number Line)

எண்ணியல் | இரண்டாம் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு - தசம எண்களை எண்கோட்டில் குறித்தல் (Representing Decimal Numbers on the Number Line) | 7th Maths : Term 2 Unit 1 : Number System

7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்ணியல்

தசம எண்களை எண்கோட்டில் குறித்தல் (Representing Decimal Numbers on the Number Line)

நாம் ஏற்கனவே பின்னங்களை எண்கோட்டில் குறித்தல் பற்றிக் கற்றுக்கொண்டோம். தற்போது தசம எண்களை எண்கோட்டில் எவ்வாறு குறித்துக் காட்டுவது என்பதைக் காண்போம்.

தசம எண்களை எண்கோட்டில் குறித்தல் (Representing Decimal Numbers on the Number Line)

நாம் ஏற்கனவே பின்னங்களை எண்கோட்டில் குறித்தல் பற்றிக் கற்றுக்கொண்டோம். தற்போது தசம எண்களை எண்கோட்டில் எவ்வாறு குறித்துக் காட்டுவது என்பதைக் காண்போம். 0.8 என்ற தசம எண்ணை எடுத்துக்கொள்வோம். இதில் 8, பத்தில் ஒன்றாவது இடத்தில் உள்ளது.

அதாவது 0.8 = (8/10) என்பது ‘0' விடப் பெரியது மற்றும் '1' விடச் சிறியது என்பதை நாம் அறிவோம். எனவே ‘0'க்கும் ‘1'க்கும் இடையே உள்ள அலகுகளைப் பத்து சமமான பகுதிகளாகப் பிரித்து அவற்றில் எட்டுப் பகுதிகளாகக் கீழே உள்ளவாறு படத்தில் குறிக்கலாம்.

1.4 என்னும் தசம எண்ணை எண்கோட்டில் குறிக்க முடியுமா? இதோ எவ்வாறு குறிக்கலாம் எனப் பார்க்கலாம். 1.4 என்ற எண்ணானது ஒன்று மற்றும் பத்தில் நான்கு பாகங்களைக் கொண்டுள்ளது. எனவே, இவ்வெண் 1 மற்றும் 2 இக்கு இடையில் உள்ளது. இதனைக் கீழ்க்கண்டவாறு எண்கோட்டில் குறிக்கலாம்.


இவற்றை முயல்க 

1. கீழ்க்காணும் தசம எண்களை எண்கோட்டில் குறிக்க

(i) 0.3

(ii) 1.7

(iii) 2.3 

விடை :

2. 2 மற்றும் 3 க்கு இடையில் உள்ள தசம எண்களில் ஏதேனும் இரண்டினை எழுதுக

2 மற்றும் 3க்கு இடையில் உள்ள தசம எண் 2.4, 2.7.  

3. '1' விட அதிகமாகவும், 2’ விடக் குறைவாகவும் உள்ள ஏதேனும் ஒரு தசம எண்ணை எழுதுக.

'1' விட அதிகமாகவும், 2’ விடக் குறைவாகவும் உள்ள தசம எண் 1.5.



7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்ணியல்