Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | கடந்த தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி - தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்

இயற்பியல் - கடந்த தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி - தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் | 11th Physics : UNIT 2 : Kinematics

11வது இயற்பியல் : அலகு 2 : இயக்கவியல்

கடந்த தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி - தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்

இயற்பியல் : இயக்கவியல் : தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் கடந்த தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி, கார்டீசியன் ஆய அச்சுத்தொகுப்பில் இடப்பெயர்ச்சி வெக்டர்

கடந்த தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்

எடுத்துக்காட்டு 2.15

உங்கள் பள்ளிக்கூடம், உங்கள் வீட்டிலிருந்து 2 km தொலைவில் உள்ளது எனக்கருதுக. வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்கும், பின்னர் மாலை பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்கும் வருகிறீர்கள் எனில், இந்நிகழ்ச்சியில் நீங்கள் கடந்து சென்ற தொலைவு மற்றும் அடைந்த இடப்பெயர்ச்சி என்ன?

தீர்வு


இந்தப் பயணத்தில் அடைந்த இடப்பெயர்ச்சி சுழி. ஏனெனில் ஆரம்பநிலை மற்றும் இறுதிநிலை ஆகிய இரண்டும் ஒரே புள்ளியாகும். ஆனால் கடந்த தொலைவு 4 km ஆகும்.

எடுத்துக்காட்டு 2.16

ஒரு தடகள வீரர் 50 m ஆரமுடைய வட்டவடிவ ஓடுபாதையில் மூன்று முறை சுற்றி வருகிறார், அவர் கடந்த தொலைவு மற்றும் அடைந்த இடப்பெயர்ச்சியைக் காண்க.

தீர்வு


தடகள வீரர் கடந்த தொலைவு

= 3 ஓடுபாதையின் சுற்றளவு 

= 3 × 2 π × 50 m = 300 π m

(அல்லது)

கடந்த தொலைவு = 300 × 3.14 942 m 

தடகளவீரர் அடைந்த இடப்பெயர்ச்சி சுழி. ஏனெனில் தடகள வீரரின் தொடக்க நிலை மற்றும் இறுதிநிலை ஆகியவை ஒரே புள்ளியில் உள்ளன.


கார்டீசியன் ஆய அச்சுத்தொகுப்பில் இடப்பெயர்ச்சி வெக்டர் தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்

எடுத்துக்காட்டு 2.17

படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு துகள் ஒன்று P புள்ளியிலிருந்து Q புள்ளிக்கு நகர்கின்றது எனில், அத்துகளின் இடப்பெயர்ச்சி வெக்டர் மற்றும் இடப்பெயர்ச்சியின் எண்மதிப்பையும் காண்க.


தீர்வு 

இடப்பெயர்ச்சி வெக்டர்

இங்கு


இடப்பெயர்ச்சி வெக்டரின் எண்மதிப்பு அலகு.

11வது இயற்பியல் : அலகு 2 : இயக்கவியல்