Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | வெக்டர்களின் கழித்தல்

தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் - வெக்டர்களின் கழித்தல் | 11th Physics : UNIT 2 : Kinematics

11வது இயற்பியல் : அலகு 2 : இயக்கவியல்

வெக்டர்களின் கழித்தல்

வெக்டர்கள் எண்மதிப்பையும், திசையையும் பெற்றிருப்பதால் அவற்றை சாதாரண இயற்கணித விதிகளைப் பயன்படுத்திக் கழிக்க முடியாது.

வெக்டர்களின் கழித்தல் 

வெக்டர்கள் எண்மதிப்பையும், திசையையும் பெற்றிருப்பதால் அவற்றை சாதாரண இயற்கணித விதிகளைப் பயன்படுத்திக் கழிக்க முடியாது. எனவே வெக்டர் கழித்தலை வடிவியல் முறை அல்லது பகுப்பு முறையில் காண வேண்டும். வடிவியல் முறையில் இரண்டு வெக்டர்களை எவ்வாறு கழிக்க வேண்டும் என்பது படம் 2.19 இல் காட்டப்பட்டுள்ளது.

  மற்றும் என்ற இரண்டு சுழியற்ற வெக்டர்கள் θ கோணத்தில் ஒன்றுக்கொன்று சாய்ந்த நிலையில் உள்ளன.    இன் தொகுபயன் மதிப்பு கீழ்க்காணுமாறு பெறப்படுகிறது. முதலில் படம் 2.19 இல் காட்டப்பட்டுள்ளவாறு   ஐப் பெற வேண்டும்.   மற்றும் – க்கு இடைப்பட்ட கோணம் 180° - θ ஆகும்.





வெக்டர்களின் கழித்தல் தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்


எடுத்துக்காட்டு 2.2 

மற்றும் என்ற இரண்டு வெக்டர்கள் ஒன்றுக்கொன்று 60° கோணத்தில் சாய்ந்த நிலையில் உள்ளன. அவற்றின் எண்மதிப்புகள் முறையே 5 அலகுகள் மற்றும் 7 அலகுகள் ஆகும். தொகுபயன் வெக்டர் - இன் எண்மதிப்பையும், வெக்டரைப் பொருத்து தொகுபயன் வெக்டர் - திசையையும் காண்க

தீர்வு 

சமன்பாடு (2.4) லிருந்து



11வது இயற்பியல் : அலகு 2 : இயக்கவியல்