Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | பாடச்சுருக்கம்

சதவீதமும் தனிவட்டியும் | மூன்றாம் பருவம் அலகு 2 | 7ஆம் வகுப்பு கணக்கு - பாடச்சுருக்கம் | 7th Maths : Term 3 Unit 2 : Percentage and Simple Interest

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 2 : சதவீதமும் தனிவட்டியும்

பாடச்சுருக்கம்

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 2 : சதவீதமும் தனிவட்டியும் : பாடச்சுருக்கம்

பாடச்சுருக்கம்

சதவீதம் என்பது பகுதியில் 100 ஐக் கொண்ட ஒரு பின்னம் ஆகும்

ஒரு பின்னத்தைச் சதவீதமாக மாற்றுவதற்கு அந்தப் பின்னத்தின் பகுதியையும் தொகுதியையும் 100 ஆல் பெருக்க வேண்டும்.

ஒரு சதவீதத்தைப் பின்னமாக மாற்ற, அச்சதவீதத்தைப் பகுதியில் 100 ஐக் கொண்ட பின்னமாக எழுதவேண்டும்

பின்னங்களைச் சதவீதமாக மாற்றுவதற்கு, கொடுக்கப்பட்ட பின்னத்தை 100% ஆல் பெருக்கவும்

அசல் என்பது கடனாகப் பெற்ற அல்லது வழங்கிய தொகை

கடன் பெற்றவர் அந்த அசலை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்தியதற்காக, ஒரு கூடுதல் தொகையை அசலுடன் சேர்த்துத் தர வேண்டும். அந்தக் கூடுதல் தொகையே வட்டி எனப்படும்.

வட்டி விகிதம் என்பது அசலுக்கு ஒவ்வொரு ஆண்டும் சதவீதத்தில் கணக்கிடப்படும்

நேரம் என்பது கடன் பெறப்பட்ட அல்லது வழங்கப்பட்ட காலத்தைக் குறிக்கும்

மொத்தத் தொகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கடன் பெற்றவர் கடன் அளிப்பவருக்குத் திருப்பியளிக்கும் தொகையாகும். இதை, மொத்தத் தொகை = அசல் + வட்டி என்ற சூத்திரத்தின் மூலம் காணலாம்.

தனிவட்டியைப் பின்வரும் சூத்திரத்தின் மூலம் காணலாம். தனிவட்டி = P×n×r/100 இங்கு P - அசல், r - வட்டி வீதம், n – காலம்


இணையச் செயல்பாடு

சதவீதமும் தனிவட்டியும்

செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப் பெறுவது 


படி 1

கீழே கொடுக்கப்பட்டுள்ள உரலியைத் தட்டச்சு செய்து அல்லது விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி இணையத்தினுள் நுழைந்த பின் ஜீயோ ஜீப்ரா என்னும் இணையப் பக்கத்தில் "பின்னத்திலிருந்து சதவீதம்" என்னும் பணித்தாள் திறக்கும். அப்பணித்தாளில் தொகுதியையும் பகுதியையும் உள்ளீடுசெய்து, பின்னத்தையும் சதவீதத்தையும் கணக்கிடலாம்.

படி 2

பணித்தாளின் இடது பக்கத்தில் உள்ள "தனிவட்டி கணக்கு" என்பதைச் சொடுக்கவும். பின்னர் P, n மற்றும் r இன் மதிப்புகளை, அதற்குரிய கட்டங்களில் உள்ளீடுசெய்து, தனிவட்டியையும் மொத்தத் தொகையையும் பெறலாம்.



செயல்பாட்டிற்கான உரலி

பின்னத்திலிருந்து சதவீதம்: https://www.geogebra.org/m/f4w7csup#material/frbmnsrw

அல்லது விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்க.


7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 2 : சதவீதமும் தனிவட்டியும்