Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | பாடச்சுருக்கம்

இயற்கணிதம் | மூன்றாம் பருவம் அலகு 3 | 7ஆம் வகுப்பு கணக்கு - பாடச்சுருக்கம் | 7th Maths : Term 3 Unit 3 : Algebra

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 3 : இயற்கணிதம்

பாடச்சுருக்கம்

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 3 : இயற்கணிதம் : பாடச்சுருக்கம்

பாடச்சுருக்கம்

பின்வரும் முற்றொருமைகள் வடிவக்கணித முறையில் நிறுவப்பட்டது

• (x + a)(x + b) = x2 + x(a+b)+ab 

• (a+b)2 = a2 + 2ab + b2 

• (a-b)2 = a2 - 2ab + b2 மற்றும் 

• (a + b)(a - b)=a2 – b2

இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட கோவைகளின் பெருக்கற்பலனாக ஒரு கோவையை எழுதினால், அவற்றை அந்தக் கோவையின் காரணிகள் எனப்படும்

ஓர் இயற்கணிதக் கோவையை அதன் காரணிகளின் பெருக்கற்பலனாக எழுதும் முறையைக் காரணிப்படுத்துதல் எனப்படும்

இரு இயற்கணிதக் கோவைகள் சமமற்றவை எனக் கூறிடும் ஓர் இயற்கணிதக் கூற்று இயற்கணித அசமன்பாடு எனப்படும்

அசமன்பாடுகளில் >,≥,< மற்றும்ஆகிய நான்கு அசமக் குறியீடுகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் இரு இயற்கணிதக் கோவைகள் இணைக்கப்படுகிறது

ஓர் அசமன்பாட்டின் இருபுறமும், ஒரு பூச்சியமற்ற மிகை எண்ணால் கூட்டவோ, கழிக்கவோ, பெருக்கவோ அல்லது வகுக்கவோ செய்தால் அதன் அசமத்தன்மை (inequlity) மாறாது

ஓர் அசமன்பாட்டின் இருபுறமும் ஒரு பூச்சியமற்ற குறை எண்ணால் பெருக்கினாலோ, அல்லது வகுத்தாலோ அதன் அசமக்குறி மாறும். உதாரணமாக, x<y -x>-y.

ஓர் அசமன்பாட்டின் தீர்வுகளை அவற்றின் மெய் மடிப்புகளை பல்வேறு வண்ணங்களில் எண் கோட்டில் குறித்து குறிப்பிடலாம்.


இணையச் செயல்பாடு

இயற்கணிதம்

செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப் பெறுவது 


படி 1

இணையத்துள் உரலியை திறந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள உரலியை தட்டச்சு செய்யவும் அல்லது விரைவுக் குறியீட்டினை ஸ்கேன் செய்யவும். “(x + a)(x + b)” எனப் பெயரிடப்பட்டுள்ள ஜீயோ ஜீப்ரா பணித்தாள் திறக்கும். x, a, மற்றும் b இன் மதிப்புகளை மாற்ற நழுவியை நகர்த்தவும். பின் வலதுபுறத்தில் உள்ள படிகளை சரிபார்க்கவும்

படி 2

முதல் படியை நிறைவு செய்தவுடன் இடதுபுறத்தில் உள்ள "அசமன்பாடு"யை சொடுக்கவும். “a” இன் மதிப்பை மாற்ற கீழே உள்ள நழுவியை நகர்த்தவும். எண்கோட்டில் தகுந்த சமமின்மைகளை காண குறியீட்டுப் பெட்டிகளை சொடுக்கவும்.



செயல்பாட்டின் உரலி 

(x+a)(x+b): https://www.geogebra.org/m/f4w7csup#material/nguv3yey

 அல்லது விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்க.


7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 3 : இயற்கணிதம்