வேர்
செல்களில் நீர் செல்லும் வழிமுறைகள்
வேர்த்தூவியின் மூலம்
உறிஞ்சப்பட்ட நீரானது வேரின் உட்புற அடுக்கிற்கு இரண்டு தனித்தனி வழிகளில்
செல்கின்றன. அவை
· அப்போபிளாஸ்ட் வழி
· சிம்பிளாஸ்ட் வழி
அப்போபிளாஸ்ட் வழியில் நீரானது
முழுக்க முழுக்க செல்சுவர் மற்றும் செல் இடைவெளியின் வழியாகச் செல்கிறது. இவ்வகை
கடத்துதலில் நீரானது எவ்வித சவ்வினையும் கடக்காமல் வகை கடத்துதல் செறிவின்
அடிப்படையில் அமைந்துள்ளது.
இம்முறையில் நீரானது செல்லின்
வழியாக செல்கிறது. அதாவது செல்லின் பிளாஸ்மா சவ்வில் நுழைந்து சைட்டோபிளாசத்தினை
கடந்து பிளாஸ்மோடெஸ்மேட்டா வழியாக அருகிலுள்ள செல்களுக்கு செல்கிறது. செல்சவ்வின்
வழியாக நீர் செல்வதால் இவ்வகை கடத்துதல் மெதுவாக நடைபெறுகிறது. சிம்பிளாஸ்ட் வகை
கடத்துதல் செறிவு சரிவின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன.
