Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | கனிமங்களின் உள்ளெடுப்பு

தாவரங்களின் கடத்துதல் - கனிமங்களின் உள்ளெடுப்பு | 10th Science : Chapter 14 : Transportation in Plants and Circulation in Animals

10வது அறிவியல் : அலகு 14 : தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்

கனிமங்களின் உள்ளெடுப்பு

உணவூட்டத்தின் தேவைக்காக தாவரங்கள் மண்ணிலுள்ள கனிம அயனிகளைச் சார்ந்துள்ளன. தேவையான அனைத்து கனிம அயனிகளையும் வேர்கள் ஆற்றல் சாரா கடத்துதல் மூலம் எடுத்துக் கொள்வதில்லை.

கனிமங்களின் உள்ளெடுப்பு

உணவூட்டத்தின் தேவைக்காக தாவரங்கள் மண்ணிலுள்ள கனிம அயனிகளைச் சார்ந்துள்ளன. தேவையான அனைத்து கனிம அயனிகளையும் வேர்கள் ஆற்றல் சாரா கடத்துதல் மூலம் எடுத்துக் கொள்வதில்லை. அவற்றிற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. 1. கனிமங்கள் மண்ணில் அயனிகளாக உள்ளதால் அவை சவ்வின் வழியாக எளிதில் புக முடியாது. 2. மண்ணிலுள்ள கனிமங்களின் செறிவு வேர்களின் செல்களில் உள்ள செறிவினை விடக் குறைவாக உள்ளது. ஆகவே பெரும்பாலான கனிமங்கள் ஆற்றல் சார்ந்த கடத்துதல் மூலமாக வேரின் புறத்தோல் சைட்டோபிளாசம் வழியாக உள் நுழைகிறது. இதற்கு தேவையான ஆற்றலை ATP-யின் மூலம் பெறுகிறது. பின்பு, நீராவிப் போக்கின் இழுவிசையின் காரணமாக அனைத்து பாகங்களுக்கும் கடத்தப்படுகிறது.

 

10வது அறிவியல் : அலகு 14 : தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்