தாவரவியல் - தண்டின் வகைகள் | 11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm

11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல்

தண்டின் வகைகள்

பெரும்பாலான பூக்கும் தாவரங்கள் நிமிர்ந்து நேர் அச்சில் வளர்கின்ற தண்டினைக் கொண்டவை. இத்தகைய தண்டுகள் (i) கூம்புவடிவ, (ii) கிளை பரவிய, (iii) கிளையற்ற மற்றும் (iv) குழல் தண்டு கொண்டவை என வகைப்படுத்தப்படுகின்றன.

தண்டின் வகைகள் (Types of stem)

பெரும்பாலான பூக்கும் தாவரங்கள் நிமிர்ந்து நேர் அச்சில் வளர்கின்ற தண்டினைக் கொண்டவை. இத்தகைய தண்டுகள் (i) கூம்புவடிவ, (ii) கிளை பரவிய, (iii) கிளையற்ற மற்றும் (iv) குழல் தண்டு கொண்டவை என வகைப்படுத்தப்படுகின்றன.

i. கூம்பு வடிவ மரங்கள் (Excurrent)

இவ்வகை மரங்கள் தொடர்ந்து வளரும் மைய அச்சினையும், படிப்படியாக நுனி நோக்கி நீளம் குறைந்த பக்கக் கிளைகளையும் கொண்டவை. இதன் விளைவாக இம்மரங்கள் கூம்பு வடிவத்தில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டு: முனூன் லான்ஜிஃபோலியம் (பாலியால்தியா லான்ஜிஃபோலியா - நெட்டிலிங்கம்), கேசுரைனா (சவுக்கு) 

ii. கிளை பரவியவை (Decurrent)

இவ்வகை மரங்களில் பக்கக்கிளைகள் மைய அச்சைக் காட்டிலும் தீவிர வளர்ச்சியைக் கொண்டவை. இதனால் மரத்தின் வடிவம் பரந்து விரிந்தோ வட்டமாகவோ காணப்படும். எடுத்துக்காட்டு: மாஞ்சிஃபெரா இண்டிகா (மா).

iii. கிளையற்றவை (Caudex)

இவை கிளைகளற்ற, பருத்த, உருண்ட, தண்டில் நிலையான வீழ் இலைத் தழும்புகளைக் கொண்ட மரங்களாகும். எடுத்துக்காட்டு : காக்கஸ் நியுசிஃபெரா (தென்னை).

iv. குழல் தண்டு (Culm)

தெளிவான கணுக்களையும், இலை உறைகளால் சூழப்பட்ட பெரும்பாலும் உள்ளீடற்ற கணுவிடைப் பகுதிகளையும் கொண்ட தண்டினைக் குழல் தண்டு என்பர். எடுத்துக்காட்டு : மூங்கில் உட்பட பெரும்பாலான புல் வகைகள்.

11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல்