Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | மின்தேக்கி மட்டும் உள்ள AC சுற்று

கட்ட விளக்கப்படம், சுற்று வரைபடம்,சூத்திரம்,தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள் | மாறுதிசைமின்னோட்டம் - மின்தேக்கி மட்டும் உள்ள AC சுற்று | 12th Physics : UNIT 4 : Electromagnetic Induction and Alternating Current

12 வது இயற்பியல் : அலகு 4 : மின்காந்தத்தூண்டலும் மாறுதிசைமின்னோட்டமும்

மின்தேக்கி மட்டும் உள்ள AC சுற்று

ஒரு மாறுதிசை மின்னழுத்த மூலத்துடன் C மின்தேக்குத்திறன் கொண்ட மின்தேக்கி இணைக்கப்பட்ட சுற்று ஒன்றைக் கருதுக

மின்தேக்கி மட்டும் உள்ள AC சுற்று

ஒரு மாறுதிசை மின்னழுத்த மூலத்துடன் C மின்தேக்குத்திறன் கொண்ட மின்தேக்கி இணைக்கப்பட்ட சுற்று ஒன்றைக் கருதுக (படம் 4.44). மாறுதிசை மின்னழுத்த வேறுபாட்டின் கணநேர மதிப்பானது



மின்தேக்கியில் உள்ள கணநேர மின்னூட்டம் q என்க. அந்தக் கணத்தில் மின்தேக்கியில் உள்ள மின்னியக்கு விசை q/c  ஆகும்.

கிர்க்காஃபின் சுற்று விதிப்படி,


மின்னோட்டத்தின் வரையறைப்படி



மின்னோட்டத்தின் கணநேர மதிப்பு


இங்கு Vm/1/Cw = Im   என்பது மாறுதிசைமின்னோட்டத்தின் பெரும் மதிப்பு ஆகும். சமன்பாடுகள் (4.43) மற்றும் (4.44) இல் இருந்து, மின்தேக்கிச்சுற்றில் பாயும் மின்னோட்டமானது செலுத்தப்பட்ட மின்னழுத்த வேறுபாட்டை விட π/2 என்ற கட்ட அளவில் முந்தி உள்ளது என்பது தெளிவாகிறது. படம் 4.45 இல் இது வரைபடமாகக் காட்டப்பட்டுள்ளது. ஒரு மின்தேக்கிச் சுற்றுக்கான அலை வரைப்படமும், மின்னோட்டம் செலுத்தப்பட்ட மின்னழுத்த வேறுபாட்டை விட 90° முந்திச் செல்வதைக் காட்டுகிறது.


மின்தேக்கியின் மின்மறுப்பு Xc

மின்னோட்டத்தின் பெருமமதிப்பு Im = Vm/1/Cwஆகும். இந்தச் சமன்பாட்டை மின்தடைச் சுற்றின் Im = Vm/R என்ற சமன்பாட்டுடன் நாம் ஒப்பிடுவோம்.

மின்தடைச்சுற்றில் மின்தடை ஆற்றிய பங்கினை,இங்கு 1/Cw என்ற அளவு செய்கிறது. மின்தேக்கிஅளிக்கும் இந்த மின்தடையானது மின்தேக்கியின் மின்மறுப்பு (Xc) எனப்படும். இது ஓம் என்ற அலகால் அளக்கப்படுகிறது.


மின்தேக்கியின் மின்மறுப்பு (Xc) அதிர்வெண்ணிற்கு எதிர்த்தகவில் மாறுகிறது. நேர்த்திசை மின்னோட்டத்திற்கு f = 0.


இவ்வாறு, ஒரு மின்தேக்கிச் சுற்று நேர்த்திசை மின்னோட்டத்திற்கு முடிவிலா மின்மறுப்பை அளிக்கிறது. அதனால் நேர்த்திசை மின்னோட்டம் மின்னோட்டம் மின்தேக்கியின் வழியே பாய இயலாது.



உங்களுக்குத் தெரியுமா?

ELI என்றால் என்ன?


ELI என்பது ஒரு சுருக்கப்பெயர் (Acronym) ஆகும். அதன் பொருள் ஒரு மின்தூண்டிச் சுற்றில் மின்னியக்கு விசை (EMF) மின்னோட்டத்தை (Current) முந்திச் செல்கிறது என்பதாகும்.

ICE என்றால் என்ன?


ICE என்பது ஒரு சுருக்கப் பெயர் ஆகும். அதன் பொருள் ஒரு மின்தேக்கிச் சுற்றில் மின்னோட்டம் (Current)மின்னியக்கு விசையை (EMFமின்னழுத்த வேறுபாடு) முந்திச் செல்கிறது என்பதாகும்.


எடுத்துக்காட்டு 4.21

220 V, 50 Hz மாறுதிசை மின்னோட்ட மூலத்திற்கு

102 / π குறுக்கே - F மின்தேக்குத்திறன் கொண்ட

ஒரு மின்தேக்கி இணைக்கப்பட்டுள்ளது. மின்தேக்கியின் மின்மறுப்பு, மின்னோட்டத்தின் RMS மதிப்பு ஆகியவற்றைக் கணக்கிடுக. மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டத்தின் சமன்பாடுகளை எழுதுக.

தீர்வு:

 


12 வது இயற்பியல் : அலகு 4 : மின்காந்தத்தூண்டலும் மாறுதிசைமின்னோட்டமும்