Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணிதம் | தொடர்ச்சியான சார்புகளின் இயற்கணிதம் (Algebra of continuous functions)

கணக்கு - தொடர்ச்சியான சார்புகளின் இயற்கணிதம் (Algebra of continuous functions) | 11th Mathematics : UNIT 9 : Differential Calculus Limits and Continuity

11 வது கணக்கு : அலகு 9 : வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை DIFFERENTIAL CALCULUS LIMITS AND CONTINUITY

தொடர்ச்சியான சார்புகளின் இயற்கணிதம் (Algebra of continuous functions)

f மற்றும் g என்ற சார்புகள், x0 −ஐ உள்ளடக்கிய அண்மைப் பகுதியிலும் x0 என்ற புள்ளியிலும் தொடர்ச்சியானவைகள் எனில்

தொடர்ச்சியான சார்புகளின் இயற்கணிதம் (Algebra of continuous functions)

f மற்றும் g என்ற சார்புகள், x0 உள்ளடக்கிய அண்மைப் பகுதியிலும் x0 என்ற புள்ளியிலும் தொடர்ச்சியானவைகள் எனில்,

(1) x = x0இல் f + g தொடர்ச்சியானது

(2) x = x0 = xஇல் f − g தொடர்ச்சியானது

(3) x = x0இல் f . g தொடர்ச்சியானது

(4) x = x0இல் f /g (g(x) ≠ 0) தொடர்ச்சியானது

(5) தொடர்ச்சியைப் பற்றிய சார்புகளின் சேர்ப்புத் தேற்றம் f என்ற சார்பு g(x0)−இல் மற்றும் g என்ற சார்பு x = x0இல் தொடர்ச்சியானவை எனில் fog −யும் x0இல் தொடர்ச்சியானது.


மூடிய இடைவெளியில் தொடர்ச்சி (Continuity in a closed interval)

வரையறை 9.9

f: [a,b] → என்ற சார்பு, திறந்த இடைவெளி (a, b)−ல் தொடர்ச்சியானதாகவும்   ஆகவும் இருப்பின், அந்தச் சார்பு மூடிய இடைவெளி [a, b] −ல் தொடர்ச்சியானது எனக்கூறலாம்.

அதாவது ஒரு சார்பு aக்கு வலப்பக்கமிருந்து தொடர்ச்சியாகவும் bக்கு இடப்பக்கமிருந்து தொடர்ச்சியாகவும் மற்றும் (a,b) திறந்த இடைவெளியில் உள்ள ஒவ்வொரு புள்ளி x0க்கும் தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.


விளக்க எடுத்துக்காட்டு 9.7

என்ற சார்பின் தொடர்ச்சித் தன்மையை ஆராய்க.

தீர்வு

சார்பு fன் வரையறைப்படி சார்பகம் மூடிய இடைவெளி [−1,1] ஆகும்.

(1 − x2 ≥ 0 ஆக இருக்கும்போது f வரையறுக்கப்படுகிறது)

c (−1, 1) என்ற ஏதேனும் ஒரு புள்ளிக்கு


இவ்வாறாக f என்ற சார்பு [−1, 1] இடைவெளியில் தொடர்ச்சியானது. இந்தக் கணக்கினை சார்புகளின் சேர்ப்புத் தேற்றம் மூலமும் தீர்க்கலாம்.


எடுத்துக்காட்டு 9.36

பின்வரும் சார்புகள் எந்த இடைவெளிகளில் தொடர்ச்சியானது எனக் காண்க.

தீர்வு

(i) f(x) = tan x என்ற சார்பு x = (2n + 1) π/2 ,n Z என்ற இடங்களில் வரையறுக்கப்படவில்லை. மற்ற எல்லா இடங்களிலும் இது தொடர்ச்சியானது, எனவே f(x) = tan x சார்பு போன்ற திறந்த இடைவெளிகளில் தொடர்ச்சியானது.

(ii) y = 1/x என்ற சார்பு x = 0− தவிர ன் மற்ற எல்லா இடங்களிலும் தொடர்ச்சியானது.

x = 0−இல் சார்பு வரையறுக்கப்படவில்லை.

g(x) = sin 1/x என்ற சார்பு x = 0 தவிர மற்ற எல்லா இடங்களிலும் தொடர்ச்சியானது.

மதிப்பு கிடைக்காது. எனவே g என்ற சார்பு (−∞, 0) மற்றும் (0, ∞) இடைவெளிகளில் தொடர்ச்சியானது.

(iii) h(x) என்ற சார்பு, =  (− ∞, ∞)−ல் x0 ≠ 0 என உள்ள எல்லா புள்ளிகளுக்கும் வரையறுக்கப்பட்டுள்ளது.


எனவே மெய்யெண் கோட்டில் உள்ள எல்லாப் புள்ளிகளுக்கும் h(x) தொடர்ச்சியானது.


எடுத்துக்காட்டு 9.37

தக்காளி மொத்த விற்பனையாளர் ஒருவர் புதியதாக அறுவடையான தக்காளியின் விலை 100 கிலோவுக்கு குறைவாக வாங்கினால் ரூபாய் ₹ 0.16/கி வீதமும் குறைந்தபட்சம் 100 கி வாங்கினால் ரூபாய் ₹ 0.14/கி விற்பதாகக் காண்கிறார். மொத்த விலையின் சார்பையும் 100 கிலோ வாங்கும்போது உள்ள விலையையும் காண்க.

தீர்வு

நாள் ஒன்றுக்கு வாங்கும் தக்காளியின் அளவு x என்க. மற்றும் விலை C என்க.

இந்தச் சார்பின் படம் பின்வருமாறு:



இங்குச் சார்பு ஒரு குறிப்பிட்ட மதிப்பு 14−ல் இருந்து மற்றொரு எண் 16க்கு மாற்றம் அடைகிறது.

11 வது கணக்கு : அலகு 9 : வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை DIFFERENTIAL CALCULUS LIMITS AND CONTINUITY