Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

உடலப் புறஅமைப்பியல் - தாவரவியல் - பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm

11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புறஅமைப்பியல்

பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

தாவரவியல் : உடலப் புறஅமைப்பியல் - முன்பதிவு மற்றும் முக்கியமான கேள்வி பதில் - சுருக்கமான கேள்விகள் பதில்கள், குறுகிய கேள்விகளுக்கான பதில்கள்

11 வது தாவரவியல் : அலகு 3

உடலப் புறஅமைப்பியல்

 

 

6. வேரின் பகுதிகளைப் படம் வரைந்து பாகம் குறி?



 

7. கீழ்கண்டவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளை எழுதுக.

 

அ.) அவிசென்னியா - ட்ராபா

அவிசென்னியா (சுவாச வேர்)

நீர் நிரம்பிய காற்றோட்டம் குறைவாக உள்ள சதுப்பு நிலங்களில் வாழும்.

சுவாசத்திற்காக, எதிர்புவி நாட்டமுள்ள சிறப்பு வேர்களை நிலமட்டத்திற்கு மேல் உருவாக்குகின்றன

சுவாசவேர்கள் நிலமேற்ப்பரப்பிலுள்ளதால் சுவாசத் துளைகள் மூலம் வளிமாற்றம் நடைபெறுகிறது 

ட்ராபா (ஒளிச்சேர்க்கை வேர்)

இதுவும் நீர் தாவரம்

இதன் வேர்கள் பசுமையானதாக மாறி ஒளிச்சேர்க்கைக்கு உதவுகின்றன  

ஆ) வேர் மொட்டுக்கள், இலை மொட்டுக்கள்

வேர் மொட்டுக்கள்

இவை பக்க வேர்களிலிருந்து தோன்றி சிறு தனிச் செடிகளாக வளரும்.

எ.கா. மில்லிங்டோனியா (மரமல்லி) 

இலை மொட்டுக்கள்

இவை இலைகளின் நரம்புகளிலிருந்தோ அல்லது விளிம்பிலிருந்தோ தோன்றும்.

எ.கா. பெகோனியா, பிரையோஃபில்லம். 

) இலைத்தொழில் தண்டு, குறு இலைத்தொழில் தண்டு

இலைத்தொழில் தண்டு

இவை பசுமை நிற, தட்டையான உருண்ட அல்லது கோணங்களுடன் கூடிய தண்டு

இவை பல கணுக்களையும், கணுவிடைப் பகுதிகளையும் கொண்டது. குறுகிய அல்லது நீண்ட இடைவெளியில் கொண்ட கிளையாகும்.

இலைத் தொழில் தண்டு வறண்ட நிலத் தாவரங்களின் ஒரு சிறப்பு தகவமைப்பாகும்.

இலைகள் பெரும்பாலும் விரைந்து உதிர்பவையாகவோ முட்களாகவோ அல்லது செதில்களாகவோ உருமாறுகின்றன.

எ.கா. யுஃபோர்பியா திருக்கள்ளி 

குறு இலைத்தொழில் தண்டு

இவை இலைத்தொழில் தண்டைப் போன்றே தட்டையான அல்லது உருண்ட தண்டு.

இவை ஒன்று அல்லது இரண்டு கணுவிடைப் பகுதிகளை மட்டுமே கொண்டிருக்கும். இவற்றின் தண்டின் தன்மை மொட்டுக்கள், செதில் இலை மலர் போன்றவற்றைப்

பெற்றிருக்கின்றன.

எ.கா. தட்டையான குறு இலைத்தொழில் தண்டு ரஸ்கஸ்

 

 

8. வேர் ஏறுகொடிகள் எவ்வாறு தண்டு ஏறுகொடிகளிலிருந்து வேறுபடுகின்றன?


வேர் ஏறுகொடிகள்

தண்டின் கணுக்களிருந்து உருவாகும் வேற்றிட வேர்களைக் கொண்டு ஆதாரத் தாவரத்தைப் பற்றி கொண்டு ஏறுகிறது

பற்றிக் கொள்ள ஏதுவாக, காற்றில் காயும் தன்மையுடைய ஒட்டுத் திரவத்தை சுரக்கின்றன.

எ.கா: பைப்பர்பீடல் பைப்பர் நைக்ரம் 

தண்டு ஏறுகொடிகள்

ஆதாரத்தைப் பற்றி ஏற, தனி சிறப்பு உறுப்புகள் கிடையாது

தண்டுப்பகுதியே ஆதாரத்தைச் சுற்றி பின்னி வளர்கிறது

எகா: ஐபோமியா, கிளைடோரியா

 

9. வரம்பற்ற கிளைத்தலையும், வரம்புடைய கிளைத்தலையும் ஒப்பிடுக


வரம்பற்ற கிளைத்தலை (ஒருபாத கிளைத்தல்)

நுனிமொட்டான தடையின்றி தொடர்ந்து வளர்ந்து கொண்டே சென்று, பலபக்கவாட்டுக் கிளைகளை உருவாக்குகிறது.

எகா: பாலியால்தியா 

வரம்புடைய கிளைத்தல் (பலப்பாத கிளைத்தல்)

நுனிமொட்டு, சிலகால வளர்ச்சிக்குப் பின் நின்று விடுகிறது. மேற்கொண்ட வளர்ச்சி பக்க ஆக்குத் திசுக்கள் (அ) மொட்டுக்கள் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது

எகா: சைகஸ்

 

10. ஓர் நடுநரம்பமைவுக்கும், பல நடு நரம்பமைவுக்கும் உள்ள வேறுபாட்டைக் கூறு


ஒரு நடு நரம்பமைவு

சிறகு வடிவ இணைப்போக்கு

ஓர் நரம்பமைவு.

ஓர் தெளிவான மைய நரம்பு. இதிலிருந்து செங்குத்தாகவும், இணையாகவும் செல்லும் பல நரம்புகள் தோன்றுகின்றன

எகா: மாஞ்சிஃபெரா 

பல நடு நரம்பமைவு

அங்கை வடிவ இணைப்போக்கு

பல நடு நரம்பமைவு.

இவ்வகையில் இலையின் அடியிலிருந்து பல நரம்புகள் தோன்றி இணையாகச் சென்று நுனியில் கூடுகின்றன

எகா: பெர்ராஸஸ் ஃபிளாபெல்பர் 

வலைப்பின்னல் மற்றும் இணைப்போக்கில் முறையே ஓர் நரம்பமைவு மற்றும் பல நரம்பமைவு காணப்படுகின்றன. 

11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புறஅமைப்பியல்