Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | பாரீஸ்சாந்து (Plaster of Paris) கால்சியம் சல்பேட் ஹெமிஹைட்ரேட்: பயன்கள்

11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள்

பாரீஸ்சாந்து (Plaster of Paris) கால்சியம் சல்பேட் ஹெமிஹைட்ரேட்: பயன்கள்

இது கால்சியம் சல்பேட்டின் ஹெமிஹைட்ரேட்டாகும்.

பாரீஸ்சாந்து (Plaster of Paris), (CaSO4.1/2H2O) கால்சியம் சல்பேட் ஹெமிஹைட்ரேட்

இது கால்சியம் சல்பேட்டின் ஹெமிஹைட்ரேட்டாகும். ஜிப்சத்தை, (CaSO4.2H2O) 393K வெப்பநிலைக்கு வெப்பப்படுத்தி பாரீஸ்சாந்து பெறப்படுகிறது.

2 CaSO4.2H2O (s) 2 CaSO4.1/2H2O + 3 H2O

393Kக்கு மேல், எவ்வித படிக நீர் மூலக்கூறும் காணப்படுவதில்லை மேலும் நீரற்ற கால்சியம் சல்பேட் CaSO4 உருவாகிறது. இது முற்றும் எரிக்கப்பட்ட சாந்து (dead burnt plaster) என அறியப்படுகிறது.

இது நீருடன் சேர்ந்து கடினமாகும் பண்பினைப் பெற்றுள்ளது போதுமான அளவு நீருடன் இதனைச் சேர்க்கும் போது இது நெகிழியைப் போன்ற பொருளாக மாறி 5 முதல் 15 நிமிடங்களில் கடினமான பொருளாக மாறுகிறது.


பயன்கள்

1. கட்டுமானத் தொழிலில் இது அதிக அளவில் பூச்சாக பயன்படுகிறது.

2. ஒரு உறுப்பில் எலும்பு முறிவு அல்லது சுளுக்கு பாதிக்கப்பட்டுள்ள இடங்களை நகராமல் இருத்தி வைக்க பயன்படுகிறது.

3. பற்சீராக்கும் துறை, அணிகலன்கள், சிலைகள் மற்றும் வார்ப்புகள் உருவாக்குவதில் இது பயன்படுகிறது.

11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள்