Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | சோடியம் ஹைட்ராக்சைடு

11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள்

சோடியம் ஹைட்ராக்சைடு

வர்த்தக ரீதியாக, கேஸ்ட்னர் - கெல்னர் மின்கலத்தில் உப்பு நீரை மின்னாற்பகுத்து சோடியம் ஹைட்ராக்சைடு தயாரிக்கப்படுகிறது.

சோடியம் ஹைட்ராக்சைடு :

வர்த்தக ரீதியாக, கேஸ்ட்னர் - கெல்னர் மின்கலத்தில் உப்பு நீரை மின்னாற்பகுத்து சோடியம் ஹைட்ராக்சைடு தயாரிக்கப்படுகிறது. இதில் மெர்குரி எதிர்மின்வாயாகவும், கார்பன் நேர்மின்வாயாகவும் பயன்படுத்தப்படுகின்றன குளோரின் வாயுவானது நேர்மின் வாயில் வெளிவருகிறது. எதிர்மின்வாயில் சோடியம் விடுவிக்கப்படுகிறது, மேலும் இது மெர்குரியுடன் சேர்ந்து சோடியம் மெர்குரி கலவையை (amalgam) உருவாக்குகிறது. இவ்வாறு பெறப்பட்ட சோடியம் மெர்குரி உலோகக் கலவையை நீருடன் வினைப்படுத்தும் போது சோடியம் ஹைட்ராக்சைடைத் தருகிறது.

எதிர்மின்வாயில்: Na+ + e-  Na (amalgam) 

நேர்மின்வாயில்: Cl 1/2 Cl2 + e- 

2Na (amalgam) + 2 H2O 2 NaOH + 2 Hg + H2

சோடியம் ஹைட்ராக்சைடு ஒரு வெண்ணிற, ஒளி கசியக்கூடிய (translucent) மற்றும் நீர் ஈர்க்கும் (deliquescent) திண்மம் ஆகும். இது நீரில் கரைகிறது, இக்கரைசல் ஒரு வலிமை மிகுந்த காரக் கரைசலாகும். இது 591K வெப்பநிலையில் உருகுகிறது. சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலின் புறப்பரப்பிலுள்ள மூலக்கூறுகள் வளிமண்டலத்திலுள்ள CO2 உடன் வினைபுரிவதால் Na2CO3 உருவாகிறது.


பயன்கள்:

சோடியம் ஹைட்ராக்சைடு பாக்சைட்டை (அலுமினியத்தின் தாது) தூய்மைப்படுத்துதல் மற்றும் பெட்ரோலிய சுத்திகரிப்பில் பயன்படுகிறது.

இது ஜவுளி தொழிலில், பருத்தி துணிகளை மேம்படுத்தப் பயன்படுகிறது.

இது சோப்பு, காகிதம், மற்றும் செயற்கைப் பட்டு ஆகியவற்றை தயாரிக்க பயன்படுகிறது.

11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள்