Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | சோடியம் பைகார்பனேட் (NaHCO3)

11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள்

சோடியம் பைகார்பனேட் (NaHCO3)

சோடியம் ஹைட்ரஜன் கார்பனேட் அல்லது சோடியம் பைகார்பனேட் ஆனது கேக் தயாரிப்பில் பயன்படுகிறது.

சோடியம் பைகார்பனேட் (NaHCO3)

சோடியம் ஹைட்ரஜன் கார்பனேட் அல்லது சோடியம் பைகார்பனேட் ஆனது கேக் தயாரிப்பில் பயன்படுகிறது. வெப்பப்படுத்தும் போது இது சிதைவடைந்து கார்பன்டைஆக்ஸைடு குமிழிகளை உருவாக்குவதால் கேக்கினுள் நுண் துளைகள் உருவாகிறது. தெவிட்டிய சோடியம் கார்பனேட் கரைசலில் கார்பன்டைஆக்சைடை செலுத்தி இச்சேர்மம் தயாரிக்கப்படுகிறது. சோடியம் கார்பனேட்டின் வெண்ணிறப் படிகமானது குறைவான கரைதிறனைப் பெற்றுள்ளதால், வீழ்படிவாகி வெளியேறுகிறது.

 

பயன்கள்

இது முதன்மையாகக் கேக் தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.

இது தோல் நோய்த் தொற்றிற்கு எதிரான மென்மையான திசு அழுகல் எதிர்ப்பொருளாகப் பயன்படுகிறது 

தீயணைப்பான்களில் பயன்படுகிறது

11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள்