பொருளியல் - கடன் | 9th Social Science : Economics: Money and Credit

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 3 : பணம் மற்றும் கடன்

கடன்

விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விதை, இடுபொருள்கள் மற்றும் செலவுகளுக்காக பருவகாலங்களின் போது கடன் பெறுவதைக் காணலாம். அதேபோல சிறு தொழில்களில் ஈடுபடுபவர்கள், வணிகர்கள் தங்கள் தேவைகளுக்குக் கடன் பெறுகிறார்கள். பெரிய தொழில் நிறுவனங்கள்கூட தங்கள் புதிய திட்டங்களுக்காகக் கடன் பெறுகின்றன.

கடன்

விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விதை, இடுபொருள்கள் மற்றும் செலவுகளுக்காக பருவகாலங்களின் போது கடன் பெறுவதைக் காணலாம். அதேபோல சிறு தொழில்களில் ஈடுபடுபவர்கள், வணிகர்கள் தங்கள் தேவைகளுக்குக் கடன் பெறுகிறார்கள். பெரிய தொழில் நிறுவனங்கள்கூட தங்கள் புதிய திட்டங்களுக்காகக் கடன் பெறுகின்றன.

கடன் கிடைக்கப்பெறும் நிறுவனங்கள்

முறைப்படி நிதி நிறுவனங்களான நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள்.

முறைசாரா நிதி நிறுவனங்கள்

சுய உதவிக்குழுக்கள் மூலம் பெறப்படும் நுண்கடன்கள் என மூன்று வழிகளில் கடன் பெறப்படுகின்றன.

நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளைப் பொறுத்தவரை கடனுக்கான வட்டி குறைவு ஈடு வைக்கப்படும் பொருளுக்கான பாதுகாப்பு அதிகம்.

முறைசாரா நிதி நிறுவனங்கள்

முறைசாரா தனியார் நிறுவனங்களை வாடிக்கையாளர்கள் அணுக எளிதாக இருப்பதும் ஏதுவாக உள்ளதும் சாதகமான அம்சங்களாகக் கருதப்படுகிறது. அதே சமயத்தில் அதிக வட்டி, ஈடு வைக்கப்படும் பொருளின் பாதுகாப்பு மற்றும் வசூலிக்கும் முறைகள் ஆகியவற்றில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன

குறிப்பிட்ட பகுதியில் வாழ்பவர்கள் அல்லது குறிப்பிட்ட தொழிலில் ஈடுபடுபவர்கள் குழுவாக அமைந்து சிறு சேமிப்பில் ஈடுபடுகின்றனர் இவர்கள் சுய உதவி குழுக்கள் எனப்படுகின்றனர். இவ்வாறு செயல்படும் சுயஉதவிக் குழுக்களுக்கு அரசு வங்கிகள் கடனுதவி அளிக்கின்றன. சுய உதவிக்குழுக்கள் நடைபாதை வியாபரிகள், மீனவர்கள், குறிப்பாகப் பெண்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்குப் பயன் அளிப்பதாக உள்ளது.

தமிழ்நாட்டில் 10,612 வங்கிக் கிளைகள் உள்ளன. 2017-2018 நிதியாண்டில் ஏறத்தாழ 15 லட்சம் கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது.


இந்தியாவில் பணம் எவ்வாறு அச்சிடப்படுகிறது?

இந்தியாவில் 1917-ல்தான் முதன் முதலில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் தயாரித்து வெளியிடப்பட்டன 1935-ல் பணப் பொறுப்பு அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கி கைக்கு வந்தது. அதன்பிறகு 500 ரூபாய் நோட்டு பணத்தை அறிமுகப்படுத்தியது 1940-ல் மீண்டும் இந்தியாவில் 1917-ல்தான் முதன் முதலில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் தயாரித்து வெளியிடப்பட்டன 1935-ல் பணப் பொறுப்பு அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கி கைக்கு வந்தது. அதன்பிறகு 500 ரூபாய் நோட்டு பணத்தை அறிமுகப்படுத்தியது 1940-ல் மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. 1947-ம் ஆண்டுவர ஆறாம் ஜார்ஜின் உருவம் பொறித்த பணமே புழக்கத்தில் இருந்தது. சுதந்திரத்திற்குப்பிறகு இந்திய அரசால் நோட்டுகள் வெளியிடப்பட்டன

இந்தியாவில் 1917-ல்தான் முதன் முதலில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் தயாரித்து வெளியிடப்பட்டன. 1935-ல் பணப் பொறுப்பு அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கி கைக்கு வந்தது. அதன் பிறகு 500 ரூபாய் நோட்டு பணத்தை அறிமுகப்படுத்தியது     1940-ல் மீண்டும் இந்தியாவில் 197-ல்தான் முதன் முதலில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் தயாரித்து வெளியிடப்பட்டன 1935-ல் பணப் பொறுப்பு அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கி கைக்கு வந்தது. அதன்பிறகு 500 ரூபாய் நோட்டு பணத்தை அறிமுகப்படுத்தியது. 1940-ல் மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. 1947-ம் ஆண்டுவரை ஆறாம் ஜார்ஜின் உருவம் பொறித்தபணமே புழக்கத்தில் இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசால் நோட்டுகள் வெளியிடப்பட்டன

ஆங்கிலேய அரசு, 1925ல் மகாராஷ்ட்டிர மாநிலத்தில் உள்ள நாசிக்கில் ஒரு அச்சகத்தை அமைத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க தொடங்கியது மத்தியப்பிரதேசத்திலுள்ள தேவாஸில் 1974-ல்ன் அச்சகம் தொடங்கப்பட்டது. இந்த இரு அச்சகங்களைத் (Security Printing and Minting Corporation of India Ltd.) தவிர, 1990களில் கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூரிலும், மேற்கு வங்காளத்திலுள்ள சல்பானியிலும் ரூபாய் மற்றும் வங்கிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அச்சடிக்க மேலும் இரு அச்சகங்களை இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கியது.

எவ்வளவு பணம் அச்சடிக்க வேண்டும் என்பதையும், எப்படிப் பாதுகாப்பாக உரிய இடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் இந்திய ரிசர்வ் வங்கியே முடிவு செய்கிறது.

பத்தாயிரம் ரூபாய் மதிப்புடைய நோட்டுகள் அச்சடிக்க இந்திய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் இருந்தாலும், தற்போது அதிகபட்சம் இரண்டாயிரம் ரூபாய் மதிப்பு வரையிலான பணத்தை மட்டுமே அச்சடிக்கிறது.

 

 

மீள்பார்வை

நாகரிகங்கள் வளர்ச்சியடைந்த பகுதிகளில் பண்டமாற்றுமுறை செழித்தோங்கியது

தங்கம், வெள்ளி மற்றும் செம்பு ஆகிய உலோகங்கள் புராதனப்பணம் என அழைக்கப்பட்டன.

 மிளகு மற்றும் நறுமணப் பொருட்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன.

உலோகப் பற்றாக்குறை காரணமாக, காகிதப்பணம் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது அலைபேசி மூலமும் வங்கி செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பணப்பரிமாற்றத்தினைப் பராமரிப்பதும் கண்காணிப்பதும் அரசின்கடமைகளகும்.

இந்தியாவின் அனைத்து பெரிய மற்றும் முக்கிய வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

பணத்திற்கும் பொருளின் விலைக்கும் இடையே நெருக்கமான தொடர்புள்ளது

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 3 : பணம் மற்றும் கடன்