Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | சுருக்கமாக விடையளி

பணம் மற்றும் கடன் | பொருளியல் | சமூக அறிவியல் - சுருக்கமாக விடையளி | 9th Social Science : Economics: Money and Credit

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 3 : பணம் மற்றும் கடன்

சுருக்கமாக விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : பணம் மற்றும் கடன் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : சுருக்கமான விடை தருக.

IV. குறுகிய வினாக்களுக்கு விடையளி.


1. பணம் ஏன் கண்டுபிடிக்கப்பட்டது?

விடை:

பணம் கண்டுபிடித்தல்

காலப்போக்கில் பண்டமாற்றம் செய்வதிலும், பண்டமாற்றும் பொருள்களின் அளவு மற்றும் மதிப்பைக் கணக்கிடுவதிலும் பிரச்சனைகள் இருந்தன.

பிரச்சனைகளுக்கு தீர்வுகாண பண்டங்களை மாற்றிக் கொள்ளப் பொதுவான மதிப்புள்ள ஒரு பொருளை நிர்ணயம் செய்தனர். இது பெரும்பாலும் உலோகமாக இருந்தது. இந்த உலோகங்களே முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட பணம் ஆகும்.

 

2. பண்டைய காலப் பணம் என்பது யாது?

விடை:

பண்டமாற்று முறைக்குப் பதிலாக தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன. இவை பண்டய காலப் பணம் ஆகும். இவை புராதனப் பணம் என்றும் அழைக்கப்படுகின்றன.

 

3. பண்டைய காலத்தில் பண்டமாற்று முறையில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் யாவை?

விடை:

பண்ட மாற்றுப் பொருள்கள்

தானியங்கள்

கால்நடைகள்

உப்பு

உணவுப் பொருட்கள்

மண்பாண்டங்கள்

தோல்

மணிகள்

ஓடுகள்

புகையிலை

சோளம்

அடிமைகள்

 

4. நறுமணப்பாதை என்றால் என்ன? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை:

நறுமணப்பாதை :

தமிழகத்தின் கிழக்குக் கடலில் இருந்து மிளகு, நறுமணப் பொருட்கள், முத்து, ரத்தினங்கள், மாணிக்கம் மற்றும் பருத்தி ஆடைகள் பலநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

ஏற்றுமதிப் பொருட்களில் மிளகு மற்றும் நறுமணப் பொருட்கள் அதிகம் இடம் பெற்றதால் இந்த வணிகப்பாதைநறுமணப் பாதைஎன்று அழைக்கப்பட்டது.

 

5. இயற்கைப் பணம் என்றால் என்ன?

விடை:

இயற்கைப் பணம்.

உலகம் முழுவதும் மதிக்கப்படும் உலோகங்களாக தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை ஏற்கப்பட்டன. இதனால் இவை நாடுகளுக்கு இடையிலான பண்டமாற்றத்தில் பொது மதிப்பீடாகப் பயன்படுத்தப்பட்டன. இவையேஇயற்கைப் பணம்ஆகும்.

 

6. குறைந்த மதிப்பிலான நாணயங்கள் ஏன் அதிகளவு அச்சடிக்கப்பட்டன?

விடை:

குறைந்த மதிப்பிலான நாணயங்கள் அதிகளவு தயாரிக்கப்பட்டன. ஏனெனில்,

வணிகத்தின் விரிவாக்கத்திற்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி, இருப்பு இருப்பதில்லை. இவை வரம்புக்குள் தான் இருந்தன.

சிறிய மதிப்பிலான பொருட்கள் வாங்கவும், விற்கவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் குறைந்த மதிப்பு உலோகங்களின் நாணயங்கள் பயன்பட்டன.

 

7. அந்நிய செலாவணி என்றால் என்ன?

விடை:

அந்நியச் செலாவணி.

ஒரு நாட்டில் பயன்படுத்தப்படும் பணம் செலாவணி என அழைக்கப்படுகிறது. இந்தியாவின் செலாவணி 'ரூபாய்' ஆகும்.

ஒரு நாட்டில் வெளி நாட்டின் செலாவணிஅந்நியச் செலாவணிஆகும். உலக நாடுகளுக்கு இடையிலான செலாவணி அமெரிக்க டாலர் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. இம்மதிப்பு நாட்டுக்கு நாடு வேறுபடும்.

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 3 : பணம் மற்றும் கடன்