Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | மின்னணுப் பரிமாற்றங்கள்

பணம் மற்றும் கடன் | பொருளியல் - மின்னணுப் பரிமாற்றங்கள் | 9th Social Science : Economics: Money and Credit

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 3 : பணம் மற்றும் கடன்

மின்னணுப் பரிமாற்றங்கள்

வங்கிச் சேமிப்பில் உள்ள பணத்தை எடுப்பதற்கு நேரடியாக வங்கிக்குச் சென்று படிவம் நிரப்பி அல்லது காசோலை வழங்கி, பெறுவதற்குப்பதிலாக, பணம் எடுக்கும் இயந்திரம் மூலம் தேவையான பணத்தை எடுக்க தானியங்கி பணம் வழங்கும் அட்டை பயன்படுகிறது.

மின்னணுப் பரிமாற்றங்கள்

வங்கிச் சேமிப்பில் உள்ள பணத்தை எடுப்பதற்கு நேரடியாக வங்கிக்குச் சென்று படிவம் நிரப்பி அல்லது காசோலை வழங்கி, பெறுவதற்குப்பதிலாக, பணம் எடுக்கும் இயந்திரம் மூலம் தேவையான பணத்தை எடுக்க தானியங்கி பணம் வழங்கும் அட்டை பயன்படுகிறது. இதன்மூலம் ஆங்காங்கு நிறுவப்பட்டுள்ள பணம் எடுக்கும் இயந்திரம் மூலம் எந்த நேரமும் நமக்குத்தேவையான பணத்தினை நமது கணக்கிலிருந்து நாம் எடுத்துக்கொள்ளலாம். இதேபோல வங்கிக்குச் செல்லாமலேயே நமது கணக்கில் பணம் செலுத்தும் வசதி சில வங்கிகளில் உள்ளது.

இதேபோல முன்னதாகப் பணம் பெற்று பின்னர் செலுத்தும் வகையில் கடன் அட்டை (Credit Card) பயன்படுத்தப்படுகிறது.

பணப்பரிமாற்றம் செய்வதற்குக் காசோலை (Cheque) அல்லது கேட்பு வரைவோலை (Demand Draft) போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கு மாற்றாக இணைய வழி பரிமாற்றங்கள் தற்போது நடைமுறையில் உள்ளன. இதன் மூலம் நினைத்த நேரத்தில் உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் நொடியில் பணப்பரிமாற்றம் செய்யலாம்.

இதேபோல் அலைபேசிமூலமும் மின்னணு பரிமாற்றம் செய்யும் தொழில்நுட்பம் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது.


9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 3 : பணம் மற்றும் கடன்