Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | பொருளாதார முக்கியத்துவம் - டெரிடோஃபைட்கள்

தாவரவியல் - பொருளாதார முக்கியத்துவம் - டெரிடோஃபைட்கள் | 11th Botany : Chapter 2 : Plant Kingdom

11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம்

பொருளாதார முக்கியத்துவம் - டெரிடோஃபைட்கள்

செலாஜினெல்லா பொதுவாக ‘ஸ்பைக் மாஸ்’ என அழைக்கப்படுகிறது.

பொருளாதார முக்கியத்துவம்

டெரிடோஃபைட்களின் பொருளாதார முக்கியத்துவம் அட்டவணை 2.3-ல் கொடுக்கப்பட்டுள்ளது.


செலாஜினெல்லா

பிரிவு - லிகுலாப்சிடா

வகுப்பு - லைக்காப்சிடா

துறை - செலாஜினெல்லேல்ஸ்

குடும்பம் - செலாஜினெல்லேசி

பேரினம் - செலாஜினெல்லா

செலாஜினெல்லா பொதுவாக ‘ஸ்பைக் மாஸ்’ என அழைக்கப்படுகிறது. இவை ஈரமான, வெப்பமண்டல, மித வெப்பமண்டலக் காடுகளில் காணப்படுகின்றன. செ. ரூபஸ்ட்ரிஸ், செ. லெபிடேஃபில்லா ஆகியவை வறள்நிலத் தாவரங்களாகும். செ. கிராசியானா, செ. கிரைசோகாலஸ், செ. மெகாஃபில்லா போன்றவை பொதுவாக காணப்படும் சில சிற்றினங்களாகும். சில செலாஜினெல்லா சிற்றினங்கள் வறட்சி காலங்களில் முழு தாவரமும் சுருண்டுவிடுகிறது. ஈரப்பதம் கிடைத்தவுடன் இவை மீண்டும் பசுமைப் பெறுகின்றனது. இவ்வகை சிற்றினங்கள் மீளெழும் தாவரங்கள் என்று அறியப்படுகின்றன.


11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம்